Sanskathi
Aug 06

கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை சென்ற 200 பேர் நேபாளத்தில் சிக்கி தவிப்பு!

கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை சென்ற 200 பேர் நேபாளத்தில் சிக்கி தவிப்பு!

நேபாளத்தில் நிலவும் மோசமான வானிலை காரணமாக கைலாஷ் மானசரோவருக்கு புனித யாத்திரை சென்ற 200 பக்தர்கள் நடுவழியில் சிக்கித்தவித்து வருகின்றனர். 

நேபால் - சீனா எல்லைப்பகுதியில் உள்ள கைலாஷ் மானசரோவருக்கு ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் சென்று வருவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான யாத்திரை கடந்த ஜூன் மாதம் 11-ம் தேதி தொடங்கியது. இதில், கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் உள்பட கிட்டத்தட்ட 1,500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பல பிரிவுகளாக பிரிந்து சென்றுள்ளனர். 

இந்நிலையில் நேபாளத்தில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, கைலாஷ் மானசரோவருக்கு, புனித யாத்திரை சென்ற 200 பக்தர்கள் அங்குள்ள சிமிகோட் பகுதியில் சிக்கித்தவித்து வருகின்றனர். அவர்களுடன் நேபாளத்திலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளும், அவர்களது குடும்பத்தினரும் தொடர்பில் இருந்து வருகின்றனர். 

இதனிடையே சிமிகோட் பகுதியில் 500 யாத்ரீகர்கள் தங்குவதற்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளதால் அங்கு சிக்கியுள்ளவர்கள் குறித்து அச்சப்பட தேவையில்லை எனவும், வானிலை சீரடைந்த பிறகு விமானங்களை அனுப்பி அவர்கள் அனைவரையும் பாதுகாப்புடன் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாவீரர்கள்