Sanskathi
Aug 08

கனடாவுக்கான சவூதியின் நேரடி விமானம் துண்டிப்பு

கனடாவுக்கான சவூதியின் நேரடி விமானம் துண்டிப்பு

கைது செய்யப்பட்டிருக்கும் மனித உரிமை செயற்பாட்டாளர்களை விடுவிக்கக் கோரிய கனடாவுடனான நேரடி விமானப் போக்குவரத்தையும் சவூதி அரேபியா இடைநிறுத்தியுள்ளது.

உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதாகக் கூறி ஏற்கனவே கனடா தூதுவரை வெளியேற்றிய சவூதி, அந்நாட்டுடனான அனைத்து வர்த்தகங்களையும் நிறுத்தியது.

எனினும் மனித உரிமைக்காக தாம் தொடர்ந்து போராடுவதாக கனடா இதற்கு பதிலளித்துள்ளது. சவூதி அரேபியா அண்மைக் காலத்தில் பல மனித உரிமை ஆர்வலர்களையும் கைது செய்துள்ளது.

இந்நிலையில் வரும் ஓகஸ்ட் 13 ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் கனடாவுக்கான அனைத்து விமான போக்குவரத்துகளும் இடைநிறுத்தப்படுவதாக சவூதி விமான சேவை அறிவித்துள்ளது.

அதேபோன்று கனடாவில் கல்வி கற்கும் ஆயிரக்கணக்காக மாணவர்களை அங்கிருந்து வேறு நாடுகளுக்கு வெளியேற்றும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக சவூதி கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மாவீரர்கள்