Sanskathi
Aug 10

கருக்கலைப்பை ஆர்ஜன்டீன பாராளுமன்றம் நிராகரிப்பு

கருக்கலைப்பை ஆர்ஜன்டீன பாராளுமன்றம் நிராகரிப்பு

அர்ஜன்டீன பாராளுமன்றத்தின் மேலவையான செனட் சபை, கருவுற்ற 14 வாரங்களுக்குள் செய்யப்படும் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்குவதற்கான சட்டமூலத்தை நிராகரித்துள்ளது.

தொடர்ச்சியாக நடந்த விவாதத்துக்கு பின்னர் இடம்பெற்ற வாக்கெடுப்பில் 38 செனட் உறுப்பினர்கள் இந்த சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்தனர். 31 பேர் இதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இந்தத் தோல்வியால், அந்நாட்டுச் சட்டங்களின்படி இந்த சட்டமூலம் இன்னும் ஓராண்டுக்கு பாராளுமன்றத்தில் முன்வைக்க முடியாது.

தற்போது பாலியல் வல்லுறவால் உண்டான கரு மற்றும் தாயின் உயிருக்கு ஆபத்து ஆகிய இரு சூழல்களில் மட்டுமே கருக்கலைப்பு செய்ய அர்ஜன்டீனாவில் அனுமதிக்கப்படுகிறது.

மாவீரர்கள்