Sanskathi
Aug 18

மோடயா என்று தனது உதவியாளரைத் திட்டிய மகிந்த!

மோடயா என்று தனது உதவியாளரைத் திட்டிய மகிந்த!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது அதிகாரி ஒருவரை “மோடயா” என பொதுஇடத்தில் திட்டிய வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ஊடகவியவாளர் கீத் நொயார் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து, மகிந்த ராஜபக்சவிடம் நேற்று குற்றப் புலனாய்வு பிரிவினர் வாக்கு மூலம் ஒன்றை பெற்றுக்கொண்டனர்.  

கொழும்பு - விஜயராமவில் அமைந்துள்ள மகிந்தவின் இல்லத்தில் வைத்து வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டது. விசாரணைகளின் பின்னர் ஊடகங்களிடம் மகிந்த கருத்து தெரிவித்திருந்தார்.

இதன்போது, தனது தனிப்பட்ட செயலாளர் ஒருவரை நோக்கி “மோடயா” என கூறி திட்டியுள்ளார். இது குறித்து வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாவீரர்கள்