Sanskathi
Aug 20

இலங்கையுடன் அனைத்து துறைகளிலும் உறவை வலுப்படுத்த வேண்டும்: இம்ரான் கான்

இலங்கையுடன் அனைத்து துறைகளிலும் உறவை வலுப்படுத்த வேண்டும்: இம்ரான் கான்

இலங்கையுடன் அனைத்து துறைகளிலும் இருதரப்பு உறவை வலுப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை உள்ளதாக, பாகிஸ்தானின் புதிய பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் தொலைப்பேசியில் உரையாடியபோதே அவர் இதனை தெரிவித்ததாக, பாகிஸ்தான் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையே வலுவான நட்புறவு காணப்படுவதாக சுட்டிக்காட்டிய இம்ரான் கான், இந்நிலையில், அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, சுற்றுலா ஆகிய அனைத்து துறைகளிலும் இருதரப்பு உறவை வலுப்படுத்த தேவை உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கை நாட்டினதும், நாட்டு மக்களதும் முன்னேற்றத்திற்கான அரசாங்கத்தின் தொடர் முயற்சிகளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

மாவீரர்கள்