Sanskathi
Aug 20

பிரச்சினைகளுக்கு முடிவு கட்டுவதற்கு அனைத்து சமூகத்தினரும் மனந்திறக்க வேண்டும்

பிரச்சினைகளுக்கு முடிவு கட்டுவதற்கு அனைத்து சமூகத்தினரும் மனந்திறக்க வேண்டும்

நாட்டில் காணப்படுகின்ற அனைத்து பிரச்சினைகளுக்கு முடிவு கட்டுவதற்கு அனைத்து சமூகத்தினரும் மனந்திறக்க வேண்டும் என தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சிப் பயிற்சி நிலையத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”பிரச்சினைகளுக்கு தீர்வு காண நாம் மனந்திறந்தால், அதன் மூலம் இயல்பாகவே அறிவு திறக்கும்.

எனவே அந்த அறிவைக் கொண்டு ஆக்கபூர்வமான முறையில் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வைக் கண்டுவிட முடியும்.

வரலாற்று கதைகளில் தமிழர்கள் மிகவும் குரூரமானவர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளனர். சிறுவயதில் இவ்வாறான கதைகளை நான் வாசிக்கும்போது, எனது தாயார் மிகவும் அன்பாகவும் ஆதரவாகவும் இவற்றை நம்ப வேண்டாம் எனக்கூறி. என்னை அரவணைத்து வழிகாட்டியிருக்கிறார்.

அதிலிருந்து ஒரு இனத்தவரை நாம் வெறுக்க கூடாது என்பது எனது வாழ்க்கைப் பாடமாக அமைந்திருந்தது. எனவே. இத்தகைய சிந்தனைப் போக்குகளில் மாற்றங்களைக் கொண்டு வந்து அனைவரும் மனந்திறந்து பேச வேண்டும். புனைவுகளை அன்றி உண்மைகளை உரத்துக் கூறவேண்டும்” எனத் தெரிவித்தார்.

மாவீரர்கள்