Sanskathi
Aug 20

வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து தொழி­லா­ளர்­களை கொண்டு வர­வேண்டிய நிலை உரு­வாகும் ; மங்கள எச்சரிக்கை

வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து தொழி­லா­ளர்­களை கொண்டு வர­வேண்டிய நிலை உரு­வாகும் ; மங்கள எச்சரிக்கை

இளை­ஞர்கள் நாட்­டிற்குள் நிலவும் சில தொழில்­வாய்ப்­பு­களை நிரா­க­ரிப்­பார்­க­ளாயின் அத் தொ­ழில் ­வாய்ப்­பு­க­ளுக்கு வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து தொழி­லா­ளர்­களைக் கொண்டு வர­வேண்டி வரும் என  நிதி மற்றும் வெகு­சன ஊடக அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்­துள்ளார். 

அர­சாங்க தொழில்­வாய்ப்­பு­களைப் பெறு­வ­தற்­காக அமைச்­சர்­களின் காரி­யா­ல­யங்­க­ளுக்கு முன்னால் மக்கள் காத்­துக்­கொண்­டி­ருக்கும் கலா­சா­ரத்தை மாற்­றி­ய­மைக்க வேண்டும். மக்­க­ளுக்கு அரச  தொழில்­வாய்ப்பு வழங்­கு­வ­தற்கு வெற்­றிடம் இல்லை. அந்­த­ள­வுக்கு அரச திணைக்­க­ளங்கள் அனைத்­திலும் தொழி­லா­ளர்கள் நிரம்­பி­யுள்­ளனர்.

ஆயிரம் பேருக்கு தொழில்­வாய்ப்பு வழங்க வேண்­டிய அரச திணைக்­க­ளங்­களில் 3 ஆ­யிரம் தொழி­லா­ளர்கள் வரையில் உள்­ளனர். அவ்­வா­றான வேலைத்­திட்­டத்தில் நானும் கடந்த காலங்­களில் பங்­கா­ள­ரா­கி­யுள்ளேன். உறுப்­பி­னர்கள் பாரா­ளு­மன்­றத்­துக்குத் தெரி­வான பின்னர் வெற்­றிடம் இல்­லாத தொழில் ­வாய்ப்­பு­க­ளுக்கும் தமது ஆத­ர­வா­ளர்­களை உள்­ளீர்ப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கின்­றனர்.  அதன்­மூலம் அத்­தி­ணைக்­க­ளங்கள் மீண்டும் நஷ்­ட­நிலைக்குச் சென்று விடு­கின்றன. 

மத்­திய கிழக்கு நாடு­களில் வழங்­கப்­படும் சம்­ப­ளத்­தையும் விட அதி­க­ள­வான சம்­பளம் பெறும் சாதா­ரண தொழில் ­வாய்ப்­புகள் நாட்டில் உள்­ளன. எனினும் அத்­தொ­ழில்­வாய்ப்­பு­களை வகிப்­ப­தற்கு எம்மவர்கள் வெட்­கப்­ப­டு­கின்­றனர்.

இருந்­த­போ­திலும் மத்­திய கிழக்கு நாடு­க­ளுக்குச் சென்று கூலித்தொழில் செய்­கின்­றனர். இவ்­வாறு சென்றால் நாட்டில் நிலவும் அவ்­வா­றான தொழில்து­றை­க­ளுக்கு வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து தொழி­லா­ளர்­களைக் கொண்டு வர­வேண்­டிய நிலை ஏற்­படும். அப்­போது வெளி­நாட்­டி­லுள்­ள­வர்­களுக்கு தொழில் வாய்ப்பு வழங்­கு­வ­தாக கோஷ­மிட வேண்டாம்.

மேலும் சிலர் அரச தொழில்­வாய்ப்­பு­களை எதிர்­பார்க்­காது முச்­சக்­கர வண்டி ஓட்­டுநர்­க­ளா­கவும் ஏனைய சுய­தொ­ழில்­க­ளிலும் ஈடு­ப­டு­கன்­றனர்.  என்னைப் பெறுத்­த­வரை முச்­சக்­கர வண்டி ஓட்­டு­நர்­க­ளாக தொழில்­பு­ரி­ப­வர்கள் 35 வயதைப் பூர்த்திசெய்திருக்க வேண்டும் என்ற ஏற்பாட்டுடன் முரண் படுகிறேன். 

ஏனெனில் தமக்கு தொழில்வாய்ப்பு இல்லாத சந்தர்ப் பத்தில் முச்சக்கர வண்டியையாவது ஓட்டித் தொழில் செய்து வாழ்க் கையை கொண்டு நடத்துவதற்கு அவர்களுக்கு இடமளிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித் துள்ளார்.

“இன்­ட­பிரைஸ் ஸ்ரீலங்கா” நிகழ்ச்சித் திட்­டத்தின் கீழ் மக்­க­ளுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்வு மாத்­தறை உயன்­வத்­தையில் நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே நிதி மற்றும் வெகு­சன ஊடக அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்­துள்ளார். 

மாவீரர்கள்