Sanskathi
Sep 07

தியாகத்தை விட வியாபாரத்திற்கு முக்கியத்துவமா?? யாழ் மாநகரசபையின் பொறுபற்ற செயல்-ஆதித்தன்

தியாகத்தை விட வியாபாரத்திற்கு முக்கியத்துவமா?? யாழ் மாநகரசபையின் பொறுபற்ற செயல்-ஆதித்தன்

நல்லூரான் வீதி நடந்தால் வினை தீரும் யாழ்மண்ணின் பெருமைமிகு அடையாளங்களின் ஒன்றான நல்லைக்கந்தனின் உற்சவம்நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது  அலங்காரக்கந்தனின் அருளாசியை பெறுவதற்கு  இலட்சக்கணக்காணவர்கள் வேற்றினத்தவர்கள்

உற்பட புலம்பெயர்ந்தவர்கள் தென்னிலங்கையை சேர்ந்தவர்கள் என ஒவ்வெரு நாளும் வீதி நிறைந்த மக்கள் நல்லூரான் வீதியைவலம்வந்துகொண்டிருக்க ஆலயத்திற்குள்ளே அபிசேகங்கள் ஆராதனைகள் தேவாரத்திருப்பதிகங்கள் என ஒலித்துக்கொண்டிருக்கின்றது

ஒரு பக்திப்பரவசத்தில் மெய்மறந்து அந்த ஆறுமுகனின் துதிபாடிக்கொண்டிருக்கஆண்மீகவாதிகளின் சொற்பொழிவுகள் தொலைக்காட்சி நிலையங்கள் வானொலி நிலையங்கள் என நல்லைக்கந்தன் புகழ்ஆசியாவையும் தாண்டி ஒலித்துக்கொண்டிருக்கின்ற பெருமை மிகு தருணத்திலே

ஆலயத்திற்கு வெளியே வியாபார நிலையங்கள் கேளிக்கையூட்டும் ஒரு சில நிகள்வுகள் என கவலை மறந்து கந்தவேலன் உற்சவத்தை கண்டு இன்புற்றுக்கொண்டிருக்கும் இந்த காலத்திலே!  ஆலயத்திற்க்கு உள்ளே இடம்பெறும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆலய நிர்வாகம் பெறுப்பேற்கின்றநிலையிலே ஆலயத்திற்கு வெளியே அனைத்து நிர்வாகமும் யாழ் மாநகர சபையினையே சாரும் அந்த வகையிலே அங்கே  வீதிகள் எங்கும் வியாபார நிலையங்கள் சிறிய கடைகள் என ஒவ்வொரு சதுர அடியும் ஒவ்வெரு தரத்திற்கேற்றால்போல ஏலத்தில் விடப்பட்ட பின்னரே

அங்கே வியாபாரம் செய்யவோ அல்லது கடைகள் அமைப்பதற்கோ அனுமதியளிக்கப்பட்டிருக்கின்றது இதற்கான முழு பொறுப்பும்யாழ் மாநகரசபையினையும் அதன் நிர்வாகத்தையுமே சாரும்அந்த வகையிலே தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்னால் உள்ள இடத்தின் வாடகை  என்ன?? இதற்கான பெறுமதி என்ன

என்பதை யாராலும் நிர்ணயிக்க முடியுமா? எத்தனையோ கோடி செலவிலே நல்லைக்கந்தன் அலங்காரக்கந்தன் ஆடம்பரக்கந்தன் என்றுதங்கத்தால் கூரை வேய்ந்து யாழ் மன்ணின் அடையாளம் யாழ்ப்பாணத்தின் பெருமை என்று பல காரணங்களை கூறுகின்ற அறிவாளிகளே!

அங்கே வீதியோரமாய் சிதைந்துகிடக்கும் திலீபனின் நினைவாலயம் அகிம்சையின் அடையாளம் அல்லவா? அது ஒரு தியாகத்தின் உறைவிடம்

அல்லவா? மலர்தூவி  மாலையிட்டு மதிப்பளிக்கவேண்டிய வரலாற்றுச்சின்னம் அல்லவா? ஆனால் அந்த இடமே தெரியாத அளவு

இலங்கையின் தொலைத்தொடர்பு வலையமைப்பு நிலையம் ஒன்று பிரமாண்டமான ஒரு கொட்டகை அமைத்து வியாபாரம் செய்ய

அங்கே அனுமதித்தது யார்??அதற்கான விலை என்ன??

வார்தைக்கு வார்த்தை மாவீரர்கள் தமிழ்த்தேசியம் என்று வாய் கிழிய பேசுகின்றவர்கள் ஒட்டுமொத்தமாக வெட்கித்தலைகுனியவேண்டும்

வரலாற்றுச்சிறப்பு மிக்க நல்லூரான் வீதியிலே தமிழர்களின் அகிம்சைக்கான ஒரு அடையாளம் அடையாளமே தெரியாமல் மறைந்து கிடக்கின்றது

சிலை திறப்போம் பூங்கா அமைப்போம் துயிலும் இல்லங்களை கட்டியெழுப்புவோம் என்று பேசிப்பேசி ஆட்சியமைத்தவர்கள் உன்மையிலே

தமிழ்த்தேசியத்திலும் மாவீரர்கள்மீதும் பற்றுள்ளவர்களாக இருந்தால்  நல்லைக்கந்தனை காண உலகம் எங்கிலும் இருந்தும் நாடு முழுவதிலும்

இருந்தும் இலட்சக்கணக்காண மக்கள் வருகைதருகின்ற இந்த தருணத்திலே தியாகதீபம் திலீபனது நினைவாலயம் அனைவரதும் கண்களிலே

படுகின்ற அளவு  இட ஒதுக்கீட்டினை செய்திருக்கவேண்டும் அந்த நினைவிடத்தை மறைக்காத அளவு வியாபார நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கவேண்டும் அங்கே வருகின்ற நூற்றில் ஒரு பிள்ளையாவது அந்த நினைவாலயத்தை பற்றிய கேள்வியை தொடுக்கும் நல்லைக்கந்தன்புகளைப்பாடுகின்ற அதே சமயம் அந்த இலட்சிய வீரனின் தியாகமும் அவனது ஈகமும் பேசப்பட்டிருக்கும் 

ஆனால் ஒட்டுமொத்தமாக அனைத்தையுமே மூடி மறைக்கின்ற அளவுக்கு ஒரு கேவலமான  துரோகத்தனமான ஒரு செயற்பாட்டினைமேற்கொண்டது யார் அதுவும் தியாக தீபம் திலீபனின் நினைவு சுமந்த இந்த மாதத்திலே ஒரு மக்கள் கூட்டம் நடமாடுகின்ற இடத்தில்அவனது நினைவாலயம் மறைக்கப்படுவது  மிகவும் ஒரு கேவலமான ஒரு செயல்  இந்த உலகம் தமிழர்களை பயங்கரவாதிகள் என்றும்

தீவிரவாதிகள் என்றும் இகள்கின்ற போது நல்லூரான் வீதியிலே நாங்களும் அகிம்சைவழியிலே நின்றவர்களே என்ற ஒரு வரலாற்றுஉன்மையினை தியாகி திலீபனது நினைவாலயம் உரத்துச்சொல்கின்றது காந்திக்கு சிலைவைத்து கொண்டாடும் மன்ணிலே காந்தியிலும்சிறந்த எங்கள் திலீபனை புறக்கணிப்பது  மிகவும் ஒரு கேவலமான இழிவான செயற்பாடாகும்

நல்லூர் கோவில் என்பது வரலாற்றுச்சின்னங்களில் ஒன்றாக கருதப்படும் நிலையிலே உற்சவகாலங்களிலே அங்கே அதிகளவிலால ஐரோப்பியர்கள்உற்பட சுற்றுலாப்பயணிகளும் வருகைதருகின்றனர் உலகவரலாற்றிலே மறைக்கப்பட்ட மழுங்கடிக்கப்பட்ட ஒரு உன்னதமான வீரனின் நினைவாலயம்மறைக்கப்படுவது அல்லது புறக்கனிக்கப்படுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய செயற்பாடல்ல

தீலீபனின் நினைவுநாட்கள் வருகின்றபோது அங்கே மாலை  அணிவித்து ஊடகங்களுக்கு அறிக்கைகள் விடுகின்ற அரசியல்வாதிகளே!! 

சமூகசெயற்பாட்டாளர்களே தமிழ்த்தேசியவாதிகளே விழித்துக்கொள்ளுங்கள்  ஆனையிறவிலும் கிளிநொச்சியிலும் ஆக்கிரமிப்பாளர்களின் 

அடையாளச்சின்னங்களை பாருங்கள் அங்கேசென்று எந்த சிங்கள அரசியல்வாதிகளும் கொக்கரிப்பதில்லை!! எக்காளமிடுவதில்லை !!

மண்டியிட்டு தலை வணங்கி மலர் தூவிச்செல்கின்றனர்!! இதைவிட ஒரு கேவலமான செயல்  அங்கே அந்த ஆக்கிரமிப்புச்சின்னங்களோடு  எங்கள்

பிள்ளைகள் ஒருசில அறிவிலிகள் குழுக்களாகவும் தனித்தனியேயும் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர் ஆனால் தமிழர்களின் வரலாற்றுச்சின்னங்கள்

அடையாளமே இன்றி அனாதைகளாய் கிடக்கின்றது நினைவுநாட்களில் மாத்திரம் மாலைகள் அனிவிப்பது  தமிழ்த்தேசியம் அல்ல 

அது காலத்தின் தேவையும் அல்ல! 

அடுத்த தலைமுறை தன் இனம் மறந்த சந்ததியாய் வளரத்தொடங்கியுள்ளது விழித்தெழுங்கள் மாநகரசபையே தியாகதீபம் திலீபனுக்கு முன்னால்

போடப்பட்டுள்ள வியாபார நிலையங்களை உடனே அகற்றுங்கள் தேசியத்தை மறைப்பது மழுங்கடிப்பது தேசத்துரோகம் இனிவரும் காலங்களிலேனும்

இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்துங்கள்


-ஆதித்தன்

மாவீரர்கள்