Sanskathi
Sep 10

தென் சூடானில் விமான விபத்து! – 19 பேர் உயிரிழப்பு

தென் சூடானில் விமான விபத்து! – 19 பேர் உயிரிழப்பு

தென் சூடானில் சிறியரக விமானமொன்று விபத்துக்குள்ளாகியதில் 19 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தென் சூடானின் தலைநகர் ஜுபாவிலுள்ள சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) யூரோல் நகரிற்கு பயணித்த சிறியரக விமானமொன்றே இவ்வாறு விபத்திற்குள்ளாகியதாக, சிவில் வான்படைத் தலைமை அதிகாரி டேவிட் சுபெக் உத்தியோகபூர்வமாக உறுதிசெய்துள்ளார்.

குறித்த விபத்தில் 19 பேர் உயிரிழந்ததாக நகர பொலிஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த விமானத்தில் 22 பயணிகள் இருந்ததாகவும் அதில் அதிகமானவர்கள் எத்தியோப்பியர்கள் மற்றும் உகண்டா நாட்டினர் எனவும் தகவல் தொடர்பு இராஜாங்க அமைச்சர் தபான் அபெல் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விமானத்தில் மூன்று குழந்தைகளும் பயணித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. விபத்தில் படுகாயங்களுடன் உயிர்த்தப்பியவர்கள் பற்றி எந்தவித தகவலும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

தென்சூடானில் தொடர்ந்துவரும் சீரற்ற காலநிலையினால் கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து அதிகமான விமான விபத்துக்கள் இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.