Sanskathi
Sep 12

லெப். கேணல் செந்தமிழ்ச்செல்வன், லெப். கேணல் சிவகாமி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்..!

லெப். கேணல் செந்தமிழ்ச்செல்வன், லெப். கேணல் சிவகாமி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்..!

யாழ். மாவட்டம் நல்லூர் பகுதியில் 12.09.1999 அன்று சிறிலங்கா படையினர் கைது செய்ய முற்பட்டவேளை சயனைட் உட்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேல்நிலைப் புலனாய்வுப் பொறுப்பாளர் லெப். கேணல் செந்தமிழ்ச்செல்வன் அவர்களின் 19 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

மற்றும் மட்டக்களப்பு மாவட்டம் அரணகல்வில் பகுதியில் சிறிலங்கா இராணுவத்துடன் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட மோதலிலும் 12.09.2001 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் சிவகாமி அவர்களின்  17  ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். ஆண்டு  ஏனைய சம்பவங்களில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

மன்னார் மாவட்டத்தில் 12.09.1999 அன்று “ரணகோச – 5” நடவடிக்கை மூலம் சிராட்டிக்குளம், பள்ளமடு மற்றும் பெரியமடுப் பகுதிகளை வல்வளைக்கும் நோக்குடன் சிறிலங்கா படைகளால் முன்னெடுக்கப்பட்ட பாரிய படை நகர்வு முறியடிப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் கஜேந்தி உட்பட ஏனைய (23) மாவீரர்களின் 19 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

மேஜர் கஜேந்தி (அருந்ததி) (பத்மநாதன் அகிலா – மாவிட்டபுரம், யாழ்ப்பாணம்)

கப்டன் நந்தா (சின்னையா விஜி – திருகோணமலை)

கப்டன் மனோ (தங்கசாமி செல்வநாயகி – ஆனந்தபுரம், கிளிநொச்சி)

லெப்டினன்ட் வஞ்சிமயில் (சங்கர் இந்திராணி – நெடுங்கேணி, முல்லைத்தீவு)

லெப்டினன்ட் சாந்தினி (இசை) (சின்னராசா சுகந்தி – கட்டுவன், யாழ்ப்பாணம்)

லெப்டினன்ட் சுடர்புகழன் (பொன்னம்பலம் தவலோகநாதன் – வள்ளிபுனம், முல்லைத்தீவு)

லெப்டினன்ட் சேதுவாணன் (சேதுராமன்) (கந்தசாமி யோகநாதன் – பொத்துவில், அம்பாறை)

வீரவேங்கை மலையரசி (சின்னையா சாவித்திரி – உடையார்கட்டு, முல்லைத்தீவு)

வீரவேங்கை இயலிசை (நமசிவாயம் தர்சினி – பூநகரி, கிளிநொச்சி)

மாவீரர்கள்