Sanskathi
Sep 13

யாழப்பாண நகர முதல்வர் மதிப்புக்குரிய இமானுவேல் ஆனோல்ட் அவர்களை வரவேற்பதில் மெத்த மகிழ்ச்சி அடைகிறேன்

யாழப்பாண நகர முதல்வர் மதிப்புக்குரிய இமானுவேல் ஆனோல்ட் அவர்களை வரவேற்பதில் மெத்த மகிழ்ச்சி அடைகிறேன்

இது அவருடைய3 ஆவது வருகை 2017 தமிழர் தெருத் திருவிழாவுக்கு வந்திருந்தார் அதே ஆண்டுநகர முதல்வர் ஆனோல்ட் கடந்த ஆண்டு வந்த போது வட மாகாண சபை உறுப்பினராக வந்திருந்தார்

இம்முறை யாழ்ப்பாண நகர சபையின் முதல்வராக வந்திருக்கிறார் சிலர் அடுத்த முறை வரும்போது வட மாகாண முதல் அமைச்சராக வர வேண்டும் என விரும்புகிறார்கள். ஆனால் அதற்குக் காலம் இருக்கிறது. அவருக்கு வயதும் இருக்கிறது.

நகர முதல்வர்ஆனோல்ட் முதல்வராக வருவதற்கு கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒரு சிறிய பங்களிப்பை செய்திருக்கிறது. நகர முதல்வர் பதவிக்கு பலர் போட்டியிட்ட போது கனடா ததேகூ எமது ஆதரவை காத்திரமான முறையில் வழங்கியிருந்தது.

பொதுவாக ததேகூ அல்லது தமிழ் அரசுக் கட்சியின் தலைமை எடுக்கும் முடிவுகளில் நாம் தலையிடுவதில்லை. ஆனால் இந்த மேயர் தெரிவு அதற்கு விதிவிலக்கு.

யாழ்ப்பாணம் இலங்கை வாழ் தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகரம். யாழ்ப்பாணத்தை ஆண்ட கடைசி மன்னன் சங்கிலியனது சங்கிலித் தோப்பு. நல்லூர் முருகன் கோயில், சுப்பிரமணயன் பூங்கா, யமுனாரி போன்ற வரலாற்று புகழ் பெற்ற இடங்கள் இருக்கின்றன.

அப்படியான ஒரு பட்டினத்துக்கு முதல்வராக இருப்பதற்கு தகுதி திறமை இருக்க வேண்டும்.நகர முதல்வர் ஆனோல்ட் இளைய தலைமுறையைச் சார்ந்த அரசியல்வாதி. அவரிடம் இருந்து நாம் உச்ச கட்ட வினைத் திறனை எதிர்பார்க்கிறோம்.

தமிழ் அரசுக் கட்சிக்கு புதிய குருதி தேவைப்படுகிறது. இளையவர்கள், படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள் தேவைப்படுகிறார்கள். இப்படி நான் சொல்வதால் மூத்த தலைவர்கள் ஓய்வு பெற வேண்டும் என்று நான் சொல்வதாக நீங்கள் நினைக்கக் கூடாது.இளைஞர்களிடம் ஆற்றல், ஆர்வம், உணர்வு  இருக்கிறது. முதியோர்களிடம் அறிவும் அனுபவம் இருக்கிறது. இந்த இரண்டும் 50-50 ஆக இருக்க வேண்டும்.

பழைய மாநகர சபை கட்டிடம் போரில் அழிவுண்டு போனது. அது புதிதாகக் கட்டப்பட வேண்டும். அதே அழகோடும் வனப்போடும் அந்தக் கட்டிடம் இருக்க வேண்டும்.மக்கள் தொகையில் யாழ்ப்பாணம் ஒரு காலத்தில் இப்போது9 ஆவது இடத்தில் இருக்கிறது.

ஆனால் நிருவாகத் திறமை, அபிவிருத்தி, தூய்மை போன்ற துறைகளில் யாழ்ப்பாண நகரம் முதல் இடத்தைப் பிடிக்க வேண்டும். அதனை முதல்வர் செய்து காட்ட வேண்டும்.பொது வாழ்வுக்கு வருபவர்கள் அரசியலில் நேர்மைபொதுவாழ்வில் தூய்மை இலட்சியத்தில் உறுதியாக இருக்க வேண்டும்.

ஊழலற்ற, நேர்மையான நீதியான ஆட்சியை அவர் தரவேண்டும் அந்த நம்பிக்கை எமக்கு இருக்கிறது.நீண்ட காலத்துக்குப் பின்னர் யாழ்ப்பாண மாநரசபை ததேகூ இன் ஆட்சி நடைபெறுகிறது. 2009 இல் நடந்த தேர்தலில் நாம் 8008 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்துக்கு வந்தோம்.

யாழ்ப்பாண மாநகரம் முன்னரைவிட எழிலோடும் பொலிவோடும் விளங்க கனடா ததேகூ இன் உதவி, ஒத்தாசை, ஆதரவு எப்போதும் இருக்கும் என முதல்வர் ஆனோல்ட் அவர்களுக்கு என உங்கள் சார்பாகவும் என் சார்பாகவும் உறுதிகூறி எனது உரையை முடித்துக் கொள்கிறேன். நன்றி. வணக்கம்.