Sanskathi
Sep 14

மிகப் பழமையான சித்திரம் கண்டுபிடிப்பு

மிகப் பழமையான சித்திரம் கண்டுபிடிப்பு

தென்னாபிரிக்காவில் சிறிய பாறை துண்டு ஒன்றில் மனிதனின் மிகப் பழமையான சித்திரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

73,000 ஆண்டுகள் பழமையான இந்த சித்திரம், பாறை மீது சிவப்பு காவி நிறத்தில் குறுக்குக் கோடுகளாக வரையப்பட்டுள்ளது. சிறிய பாறை துண்டில் இருக்கும் இந்த சித்திரம் தெற்குக் கடற்கரையில் உள்ள ப்லொம்போஸ் குகையைச் சேர்ந்த ஒரு குறிப்புப் போல் இருப்பதாக சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

கேப்டவுனில் இருந்து 300 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் ப்லொம்போஸ் குகையில் இருந்து இதற்கு முன்னரும் பல பண்டைய கலை படைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தற்போதைய ஆபிரிக்காவிலேயே 315,000 ஆண்டுகளுக்கு முன்னர் தற்கால மனிதனான ஹோமோ சேப்பியன்கள் தோன்றினார்கள்.