Sanskathi
Sep 14

கனடாவில் இரு விலங்குகளின் மம்மிகள் கண்டெடுப்பு!

கனடாவில் இரு விலங்குகளின் மம்மிகள் கண்டெடுப்பு!

கனடாவின் ஆட்சி எல்லைக்குட்பட்ட யூகோன் மலைப்பகுதியில் இரு விலங்குகளின் மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

யூகோன் மலைப்பகுதிக்கு அருகிலுள்ள டைவுசன் நகரத்தில் தங்கச் சுரங்க வேலைபார்க்கும் பணியாளர்கள், கலைமான் ஒன்றினதும் ஓநாய்க் குட்டியொன்றினதும் மம்மிகளைக் கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த இரு விலங்குகளின் உடல்களும்  50 ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்டதென தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மம்மிகள் இரண்டினுடைய தோல், மயிர், தசைகள் அனைத்தும் இன்னும் சேதப்படாத வகையில் பதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளதாக குறித்த ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த இரு விலங்கினங்களும் மிகவும் அரியவகை விலங்கினங்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.