Sanskathi
Sep 24

தியாக தீபம் திலீபனது 31வது நினைவு சுமந்து ஒன்றுபடுவோம் நாம் தமிழர்களாய்-ஆதித்தன்

தியாக தீபம் திலீபனது 31வது நினைவு சுமந்து ஒன்றுபடுவோம் நாம் தமிழர்களாய்-ஆதித்தன்

இன்று புரட்டாசி 26  இன்றய நாள் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் ஓர் மகத்தான நாள் .ஈழத்தமிழர்கள் பயங்கரவாதிகள் என்றும் ஆயுதப்பிரியர்கள் என்றும்

அவர்கள் மீது பூசப்பட்டிருக்கும் மிகவும் மோசமான ஒரு கறையினை நீக்கி ஈழத்தமிழர்களும் அகிம்சையின் வழியிலே நின்றவர்கள் அகிம்சைமீது

தளராத நம்பிக்கை கொண்டிருந்தவர்கள்  தளராத நம்பிக்கை என்பது  அவர்களின் இதயத்தின் இறுதி துடிப்பு அடங்கும்வரைக்கும் அகிம்சைமீது

அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கை துளி அளவுகூட தளர்வடையவில்லை என்ற ஒரு வரலாற்று உன்மையினை உலகிற்கு உணர்த்திய நாள்

ஒரு சமூகத்தின் விடுதலைக்காகவும்  ஆரோக்கியமான ஒரு எதிர்காலத்திற்காகவும் போராடியவர்கள் மீது பயங்கரவாதிகள் என்று சுமத்தப்பட்ட ஒரு 

வரலாற்றுப்பழி நீங்கிய ஒரு மகத்தான நாள் என்பதோடு அகிம்சைமீது அவர்கள் வெறுப்புக்கொண்டு ஆயுதப்பிரியர்களாகவும் புரட்சியாளர்களாகவும்

புதியதோர் வேகத்தோடு அவதாரம் எடுத்த நாள் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம்

ஆம் இன்றுதான் இளமைத்துடிப்பும் எத்தனையோ கனவுகளும் மிகுத்த ஒர் இளம் தளிர் ஒன்று ஈழத்தமிழர்களின் கண் முன்னே பட்டினித்தீயிலே 

கருகிப்போனது இன்றுதான் தியாக தீபம்  அகிம்சாவாதத்தின் விடிவெள்ளி ஈழத்தமிழர்களின்  வானத்தை விட்டு  மறைந்துபோன நாள்

மரணம் என்பது மனிதனுக்கே தவிர அது மாவீரனுக்கு என்றும் இல்லை இது வரலாறு சொல்லும் உன்மை பிறர் வாழ தன் உயிரை தியாகம்

செய்கின்றவர்கள் வரலாற்றில் என்றுமே வாழ்ந்துகொண்டிருப்பார்கள்!!

ஈழத்தமிழர்களின் வரலாற்றிலே ஒரு பாரிய சோகத்தினையும் ஈழவிடுதலைப்போராட்டத்தின் பேரெழுர்ச்சிக்கும் முக்கியமான ஒரு காரனியாகவும் அமைந்த்தது

தீலீபனின் இழப்பு அகிம்சைரீதியாக போராடினால் உரிமைகளை பெற்றுக்கொள்ளலாம் என்றும் உலகத்தில் அகிம்சைதான் சிறந்த ஒரு ஆயுதம் என்றும்

வரையப்பட்ட வசனம்  நல்லூரான் வீதியிலே பொய்யாகிப்போனது   உணவின்றி நீரின்றி வாடிப்போன அந்த இளைஞனை உலகத்தில் அகிம்சையினை

போதிக்கும் எந்த ஆசானும் கண்டுகொள்ளவில்லை  அனுகுண்டையும் ஆட்லறியையும் கைகளில் வைத்துக்கொண்டு அகிம்சை பேசும் ஆசாமிகளும் 

காந்தியதேசம் என்றும் புத்தன் பிறந்த பூமி என்றும் புனிதம் பேசும் இந்தியாவும் பார்த்துக்கொண்டிருக்க பறிக்கப்பட்டது பார்திபனின் உயிர் . 

எல்லோரும் இன்புற்றிருப்பதை தவிர வேறென்றும் அறியேன் என்ற தமிழனின் பிள்ளை  பட்டினித்தீயிலே கருகிப்போனது 

ஒரு இனத்தின் விடியலுக்காக அந்த இனத்தின் விடுதலைக்காக தன் உயிரையே தியாகம் செய்யும் அளவிற்கு இன்றய நவீன உலகில் மனிதர்கள் யாரும்

இல்லை .இங்கே மனிதர்கள் என்று கூறும் அளவுக்கு யாரும் மனிதர்களாக வாழவில்லை  அவசர உலகின்

நின்றுவிடாத இயந்திரங்களாகவும் பிணம் தின்னும் கழுகுகளாகவும் பணத்துக்கும் பதவிக்கும் பகட்டு வாழ்கைக்கும் தன்மானத்தையும் தனித்துவத்தினையும்

அடகுவைக்கும் மனிதர்கள் அதிகமாக வாழும் இந்த பூமியில் திலீபன் பிறந்தான் வாழ்ந்தான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கின்றான் 

என்பது பெருமிதமான விடயம் 

புத்தனின் புனிதபூமி என்றும் காந்தியின் தேசம் என்றும் உலகத்தில் தன்னை உயர்த்திக்கொள்ளும் இந்தியாகூட திலீபனின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை

இளமையும் துடிப்பும் மிக்க அந்த இளைஞனுக்கு எப்படி இவளவு தியாக உணர்வும் அகிம்சைமீது விருப்பும் சாகும் வரையிலும் அதன்மீது தளராத நம்பிக்கையும்

வந்தது என்று தெரியவில்லை ஆனால் அந்த அகிம்சையே அவனுக்கு எமனாகியது என்பது வேதனையான விடையம் திலீபன் அப்படி எதைகேட்டான்

திலீபனின் கோரிக்கைகள்தான் என்ன ? மனிதகுலத்துக்கே ஒவ்வாத ஒன்றைக்கேட்டானா? அவன்கேட்டது நியாயமானது அவனது கோரிக்கைகள் அத்தனையும்

சிங்கள இனவாதபூதங்களால் அழிக்கப்பட்டுக்கொண்டிருந்த தமிழ்மக்களின் விடுதலைக்கானது தனது இனம் இன்னொரு இனத்தினால் அழிக்கப்பட்டு சித்திரவதைப்படுவதை

கண்டு அவர்களின் விடியலுக்காக ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து அதனை ஏற்றுக்கொள்ளும்வரையும் உணவின்றி நீரின்றி அந்த நல்லூரான் வீதியிலே

பட்டினியால் துடித்து உயிர்விட்டான் அந்த உத்தமன்.

இதிலே மிகவும் கொடுமையான விடயம் அகிம்சைக்கே ஆசானாக தன்னை காட்டிக்கொள்ளும் இந்தியதேசத்திடமே தியாக தீபம் தனது கோரிக்கைகளை

முன்வைத்து அறப்போரை தொடுத்திருந்தான் அப்படி அவன் எதைக்கேட்டான் மனிதகுலத்திற்கு ஒவ்வாத விரோதமான எதையாவது கேட்டானா

அவனது ஐந்து கோரிக்கைகளிலே ஒன்றைக்கூட இன்றுவரைக்கும் நிறைவேற்றமுடியாதவர்கள் அகிம்சைபற்றி பேசுவது பொருத்தமற்ற கேலிக்கிடமன

செயற்பாடாகும் இந்தியதேசத்திடம் அவன் முன்வைத்த கோரிக்கைகள்

1)மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும். என்றான் அகலக்கால் பரப்பி

வந்துகொண்டிருக்கின்றது சிங்கள ஆக்கிரமிப்புப்பூதம் அடித்து விரட்டினோமா இல்லையே!!

2)சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.

அரசியல் கைதிகள் பற்றிய பேச்சையே மறந்துபோயல்லவா மல்லுக்கு நிக்கின்றோம் ஒரே வீட்டுக்குள்

3)அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும். அது முழுமையாக நீக்கப்பவே இல்லை அதைப்பற்றிய பேச்சும் இல்லை

4)ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.இப்படியொரு கோரிக்கை இருப்பதை மறந்தே போனோம்

5)தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும். ஆனால்

வன்முறைவேண்டாம் ஆயுதக்கலாசாரம் வேண்டாம் எங்கும் அமைதி அமைதி என்று பகட்டுவித்தை காட்டும் மனிதர்கள் அன்று அகிம்சைரீதியாக தன் இனத்திற்கு

நீதிகேட்டு தவம் இருந்த திலீபனை கண்டுகொள்வில்லை காரணம் என்ன? ஆடைகளுக்குள் ஆயுதங்களை மறைத்துவைத்து அகிம்சைபேசும் போலிமனிதர்களை

நம்பி திலீபனை பலிகொடுத்தது ஈழத்தமிழினம் .

விடுதலைப்புலிகள் வன்முறையாளர்கள் என்றும் அவர்கள் பயங்கரவாதிகள் என்றும் முத்திரைகுத்திய இந்தியா உற்பட உலகநாடுகள் அனைத்தும் அன்று திலீபனின்

கோரிக்கைகளிற்க்கு மதிப்பளித்திருந்தால் அவனின் அகிம்சை வெற்றிபெற்றிருந்தால் இன்று இந்த அளவிற்கு ஆயுதக்கலாசாரம் வளர்ச்சியடைந்திருக்காது

ஈழத்தமிழர்களைப்பொறுத்தவரை திலீபனுடன் அகிம்சையும் மரணித்துப்போனது என்பதுதான் உன்மை எனவேதான் அவர்கள் ஆயுதங்கள்மீது நம்பிக்கை

கொள்ளவேண்டியிருந்தது ஆயுதங்கள்மூலம்தான் உலகத்தின் பார்வை அவர்கள்மீது திரும்பியது என்பது மறுக்கமுடியாது  அவர்கள் திலீபனின் மரணத்தோடு

அகிம்சையினை முற்றாக வெறுக்க நேரிட்டது அதன் விளைவுதான் ஒரு சிறிய போராட்டக்குழுவாக இருந்த விடுதலைப்புலிகள் உலகின் வல்லரசு நாடுகளில்

ஒன்றான இந்தியாவுடன் சரிநிகராக களத்தில் நின்று சண்டைசெய்யும் மனோபலத்தை கொடுத்தது 

வாழவேண்டிய வயதும் அனுபவிக்கவேண்டிய இளைமையும் மிக்க ஒரு இளைஞன் அதுவும் இந்த மண்ணையும் மக்களையும் நேசித்த  மருத்துவபீட 

மாணவன் அவனின் இழப்பு எவளவு வலியினையும் தாக்கத்தினையும் உருவாக்கியிருக்கும்  இங்கே வேடிக்கையான கேலிக்குரிய விடயம் என்ன என்றால்

காந்தி காந்தி என்று தொண்டைகிழிய கத்தும் இந்தியதேசம் சுற்றிநின்று வேடிக்கை பாத்துக்கொண்டிருக்க அகிம்சை செத்துப்போனது திலீபனின் உருவிலே

காந்தியவழியில் போராடுவோம் உலகத்தில் நாம்தான் அகிம்சாவாதிகள் என்று யார் யாரோ தலைகளில் எல்லாம் அடித்து சத்தியம்செய்யும் இந்தியதேசமே

திலீபனின் அகிம்சையினை கண்டுகொள்ளவில்லை என்றால் உலகத்தில் வேறு யார் அகிம்சையினை கண்டுகொள்வார்கள்

காந்தியின் வழியில் காந்தியதேசத்தை நம்பி மரனித்துப்போன திலீபனை இன்னமும்

பயங்கரவாதி என்று கூறுவது மிக மிக கேலிக்குரியவிடயம இதற்கான காரணம் என்ன ஒருவேளை திலீபனை அகிம்சாவாதி என்று கூறிவிட்டால் காந்தியிலும் 

சிறந்தவன் என்ற பெயரை திலீபான் பெற்றுவிடுவான் என்ற அச்சமாகக்கூட இருக்கலாம் இந்தியதேசம் தமது பெயர் மங்கிவிடகூடாதென்பதற்காகவும் திலீபனின்

மரணத்தில் தமக்கும் பங்கு உண்டு என்ற காரணத்தினாலும் புனிதனாக பூசிக்கப்படவேண்டிய அந்த அகிம்சாவாதியை பயங்கரவாதியாக சித்தரிக்கின்றனர்  

திலீபன் இந்த மண்ணைவிட்டுச்சென்று  31 வருடங்கள் ஆகிவிட்டது ஆனால் இன்னமும் அவனது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளவில்லை அகிம்சையினை

நம்பி மரணித்த அந்த மாவீரனின் இழப்புக்கு காரனமான இந்தியா அதற்க்காக மன்னிப்பும் கேட்கவில்லை ஒருசிறிய ஆதங்கத்தைக்கூட வெளிப்படுத்தவில்லை

சட்டங்களும் சம்பிர்தாயங்களும் வல்லமைகொண்டவர்களுக்குத்தான் வாலாட்டும் என்பது இதில் நிதர்சனமாகிறது அமைதிப்படை என்ற பெயரில்

நாடுவிட்டு நாடு வந்து எங்கள் உறவுகளை கொன்றுகுவித்த இந்திய  வல்லாதிக்க இரானுவத்தினருக்கு பலாலியில் நினைவுத்தூபி அமைத்து மாலையிட்டு

மரியாதை செய்யும் சிங்களப்போரினவாதம் நல்லூர் வீதியிலே அமைக்கப்பட்ட திலீபனின் நினைவாலயத்தினைக்கூட விட்டுவைக்கவில்லை

அகைம்சைரீதியாகப்போராடி உயிர்நீத்த ஒருவனை பயங்கரவாதி என்று ஒதுக்கி வைப்பது அநீதி பயங்கரவாதி என்ற சொல்லுக்குள் திலீபனின் தியாகம்

 இந்தியா தனது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளும் என்று ஆழமாக நம்பிய திலீபனை

இந்தியாவின் மௌனமும் பொறுப்பற்ற தன்மையும் கொன்று போட்டது

எம் இனத்தின் விடியலுக்காகவும் விடுதலைக்காகவும் போராடிய பல்லாயிரம் வீரர்கள் பிறந்த இந்த மண்ணிலே விடுதலைக்கு வித்தாகி விழ்ந்த உடல்கள் 

எத்தனை எப்படி எல்லாம் போராடமுடியுமோ அப்படி எல்லாம் போராடிவிட்டோம் ஆனால் நீதியும்  நியாயமும் எமக்கு கிடைப்பதாக இல்லை 

இனியும் என்னசெய்யப்போகின்றோம் ஒட்டுமொத்த தமிழினமும் தூக்குப்போட்டு சாகப்போகின்றோமா அல்லது சரித்திரம் ஒன்றை மாற்றி எழுத

புறப்படப்போகின்றோமா?

மரணப்படுக்கையிலே திலீபன் சொன்னதுபோல மக்கள் புரட்சி ஒன்று வெடிக்கட்டும் ஒன்றுபட்ட தமிழ்ச்சமூகத்தின் குரல் ஓங்கி ஒலிக்காவிடின் ஒட்டுமொத்த

தமிழினத்தின் குரல்வளையினை ஆதிக்க சக்திகள் நசுக்கிவிடும் 

சுயநலமற்ற மனிதர்களாக மண்ணிலே வாழும்வரை சுயமரியாதையுடன் வாழ சுதந்திரக்காற்றினை சுவாசிக்க 

தியாக தீபம் திலீபனை மனதில் நிறுத்தி எல்லோரும் ஒன்றுபடுவோம்


-ஆதித்தன்