Sanskathi
Sep 24

யுத்த குற்றவாளிகளை காப்பாற்றும் செயற்பாட்டிற்கு கூட்டமைப்பு ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்காது

யுத்த குற்றவாளிகளை காப்பாற்றும் செயற்பாட்டிற்கு கூட்டமைப்பு ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்காது

யுத்த குற்றவாளிகளை காப்பாற்றும் செயற்பாட்டிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்காது என ரெலோ அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று(திங்கட்கிழமை) நடைபெற்ற தமிழீழ விடுதலை இயக்கத்தின் பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதில் எந்தவித விட்டுக்கொடுப்பிற்கும் இடமில்லை எனவும், இதனை எந்த சந்தர்ப்பத்திலும், தமிழீழ விடுதலை இயக்கம் அனுமதிக்காது எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், இலங்கை ஜனாதிபதியோ, பிரதமரோ யுத்த குற்றம் புரிந்த இராணுவத்தினரைக் காப்பாற்ற முயற்சித்தால், அதற்கு எதிராக தமிழ் இனம் முழு மூச்சாக எதிர்ப்பு தெரிவிக்கும் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.