Sanskathi
Oct 09

சகோதரர் கைது எதிரொலி - அரசியல் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கினார் நவாஸ் ஷெரீப்

சகோதரர் கைது எதிரொலி - அரசியல் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கினார் நவாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சித்தலைவருமான நவாஸ் ஷெரீப், பனாமா பேப்பர் ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை பெற்றார்.

சுமார் 2 மாதங்கள் சிறையில் இருந்த அவர் மனைவியின் மரணத்துக்காக பரோலில் வந்தார். பின்னர் அவருக்கு கடந்த மாதம் 19-ந் தேதி இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது.

முன்னதாக தனது மனைவியின் உடல் நலக்குறைவு மற்றும் சிறைத்தண்டனை உள்ளிட்ட காரணங்களால் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து அவர் ஒதுங்கி இருந்தார். நவாஸ் ஷெரீப்பின் கட்சிப்பணிகளை அவரது சகோதரரும், பஞ்சாப் மாகாண முன்னாள் முதல்-மந்திரியுமான ஷபாஸ் ஷெரீப் கவனித்து வந்தார்.

இந்த நிலையில் ஷாபாஸ் ஷெரீப்பும் ஊழல் வழக்கில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அவருக்கு 10 நாள் காவல் விதிக்கப்பட்டது. இதனால் உரிய தலைமையோ, வழிகாட்டுதலோ இன்றி பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியினர் தவித்தனர்.

எனவே சுமார் 4 மாதங்களுக்குப்பின் நவாஸ் ஷெரீப் மீண்டும் தனது அரசியல் நடவடிக்கைகளை நேற்று தொடங்கினார். இதில் முதல் நிகழ்வாக கட்சியின் மத்திய செயற்குழுவை அவசரமாக கூட்டி அவர் ஆலோசனை நடத்தினார்.

இதற்கிடையே அவர் மீது போடப்பட்டு இருந்த தேசத்துரோக வழக்கு ஒன்று லாகூர் ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதற்காக அவர் கோர்ட்டில் ஆஜரானார்.

மாவீரர்கள்

Photo of Byron Bay, one of Australia's best beaches!

Event Calendar

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல் ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...
வன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019 வன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019...
முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.! முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.!...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மாபெரும் போராட்டத்திற்கு... வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மாபெரும் போராட்டத்திற்கு......
"இனியொரு விதி செய்வோம் 2019"...
முல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்... முல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்......
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி...
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி...
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி...