Sanskathi
Oct 20

தன்னை கொலை செய்வதாக மரண அச்சுறுத்தல் : சுஜீவ சேனசிங்க வெளியிட்ட தகவல்

தன்னை கொலை செய்வதாக மரண அச்சுறுத்தல் : சுஜீவ சேனசிங்க வெளியிட்ட தகவல்

தனக்கு மரண அச்சுறுத்தல் இருப்பதாகவும் இது தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் சர்வதேச வர்த்தகம் மற்றும் மூலோபாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,

தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து அண்மையில் விளக்கம் கொடுத்தேன். அதேதினத்தன்று, கொழும்பு சங்கிரீலா ஹோட்டலில் பிரதமரும் நானும் இரவு நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்தோம்.

இரவு 10.00 மணிக்கு எனக்கு தொலைபேசி அழைப்பொன்று வந்தது. அண்டன் தேசப்பிரிய என்பவரே தொடர்பு கொண்டிருந்தார். எனக்கு தேவையற்ற வார்த்தையில் திட்டிவிட்டு, கொலை செய்வதாகவும் மரண அச்சுறுத்தல் விடுத்தார்.  40 விநாடிகள் பேசிக் கொண்டு செல்லும் போது நான் தொலைபேசியைத் துண்டித்தேன் என்றார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொலை அச்சுறுத்தல் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு கொண்டிருக்கும் இந்நேரத்தில் அமைச்சர் சுஜீவ சேனசிங்க இவ்வாறு ஒரு கருத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.