Sanskathi
Oct 24

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வேதன அதிகரிப்பை வலியுறுத்தும் 'ஒக்டோபர் 24' போராட்டம் இன்று

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வேதன அதிகரிப்பை வலியுறுத்தும் 'ஒக்டோபர் 24' போராட்டம் இன்று

பெருந்தோட்டத் தொழிலாளர்களது வேதன அதிகரிப்பு தொடர்பாக பல்வேறு போராட்டங்கள்இடம்பெற்று வருகின்றன.

அதன்படி இன்றையதினம் காலிமுகத்திடலில் முற்பகல் 10.00 மணிக்கு 'ஒக்டோபர் 24'போராட்டம் இடம்பெறவுள்ளது. சமுக வலைத்தளங்களின் ஊடாக ஒன்றிணைந்த அரசியல் சார்பற்ற இளைஞர்களின் முன்னெடுப்பாக இந்த தன்னெழுச்சி போராட்டம் அமையவுள்ளது.

இதில் அரசியல், கட்சி மற்றும் பிரதேச பேதங்கள் இன்றி, பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களுக்கான கூட்டு ஒப்பந்தம் ரத்து செய்யப்படல், நாளாந்த அடிப்படை வேதனத்தை 1000 ருபாவாக அதிகரித்தல் ஆகிய முக்கிய கோரிக்கைகள் வலியுறுத்தப்படவுள்ளன.இதில் கலந்து கொள்வதற்காக நாட்டின் பல பாகங்களில் இருந்தும் இளைஞர்கள் கொழும்புக்கு பிரவேசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டம் அரசியல் கலப்பு அல்லாமல் நடத்தப்பட வேண்டும் என்றும், அதற்கு இதில் கலந்துக் கொள்கின்ற இளைஞர்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும், போராட்டத்துக்கான ஏற்பாட்டுக் குழுவின் அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த போராட்டத்தை சிலர் தங்களது சுய அரசியல் லாபத்துக்காக பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.