Sanskathi
Oct 30

சௌமியமூர்த்தி தொண்டமானின் நினைவு தினம் இன்று

சௌமியமூர்த்தி தொண்டமானின் நினைவு தினம் இன்று

மலையக மக்களது முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராக விளங்கிய, சௌமியமூர்த்தி தொண்டமானின் நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்படுகிறது.

கடந்த 1999 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 30 ஆம் திகதி தனது 86வது வயதில் அவர் கலமானார்.அவர் இறக்கும் போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவராகவும் இலங்கை அரசின் அமைச்சரவையில் வயது மூத்த அமைச்சராகவும் இருந்தார்.

இவர் தொடர்ந்து 21 வருடங்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் அமைச்சராகப் பதவி வகித்தார்.இந்தநிலையில், அவரது நினைவு தின நிகழ்வுகள் இன்று நாடாளுமன்ற கட்டித்தொகுதியில் இடம்பெறவுள்ளதாக, மத்திய மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் ராமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.