Sanskathi
Nov 05

இத்தாலி வெள்ளம்: பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அரச தலைவர்கள் விஜயம்

இத்தாலி வெள்ளம்: பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அரச தலைவர்கள் விஜயம்

இத்தாலியில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை பிரதமர் ஜிசுப்பே கொன்டே நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

அதிகளவு பாதிப்பை எதிர்கொண்ட சிசிலி பிராந்தியத்திற்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சென்ற பிரதமரை சிசிலி நகர மேயர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

வெள்ள அனர்த்தம் ஏற்பட்ட பகுதியை ஹெலிகொப்டரில் சென்றவாறு பார்வையிட்ட பிரதமர், அதன் பின்னர் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவசர நிலைமைகள் தொடர்பில் வைத்தியர்களிடம் கேட்டறிந்தார்.

இதேவேளை இத்தாலியின் பிரதி பிரதமர் மட்டியோ சல்வினியும் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்ட பகுதிக்குச் சென்று நிலைமைகளை பார்வையிட்டார்.

கடந்த ஒருவார காலமாக இத்தாலியில் புயல் காற்றுடன் கடும் மழை பெய்தது. இதில் சிக்கி இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளும் மீட்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நிவாரண பணிகளுக்காக 250 மில்லியன் யூரோக்கள் வழங்கப்பட்டுள்ளதாக இத்தாலி உட்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.