Sanskathi
Nov 08

ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்க அழைப்பு விடுத்தார் மக்ரோன்

ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்க அழைப்பு விடுத்தார் மக்ரோன்

அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளிடமிருந்து ஐரோப்பிய நாடுகளை பாதுகாத்துக் கொள்வதற்கு ஐரோப்பிய ராணுவமொன்று உருவாக்கப்படுவது அவசியமென பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

அதிகாரத்துக்கு வந்த நாள் தொடக்கமே பிரெஞ்சு ஜனாதிபதி கூட்டு ஐரோப்பிய ஒன்றிய ராணுவப் படையை உருவாக்குவதற்கு ஐரோப்பிய நாடுகளை வலியுறுத்தி வருகிறார்.

இன்று பாரிஸில் சந்திக்கவுள்ள ஒன்பது ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் முதல்முறையாக ஐரோப்பிய ராணுவத்தின் செயற்பாடு குறித்து விவாதிப்பார்களெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளிடமிருந்து நாம் நமது நாடுகளை பாதுகாத்துக் கொள்ளவேண்டுமென தெரிவித்துள்ள பிரெஞ்சு ஜனாதிபதி முக்கியமாக அமெரிக்கா மீது ஐரோப்பா குறைந்தளவு நம்பிக்கையே கொண்டிருக்கவேண்டுமெனவும் கூறியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்குமிடையிலான அணுவாயுத ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டுவரவுள்ளதாக அறிவித்ததைத் தொடர்ந்தே பிரெஞ்சு ஜனாதிபதி ஐரோப்பிய  ராணுவத்தை உருவாக்குவதற்கு வலியுறுத்தியுள்ளார்.