Sanskathi
Nov 09

முத்தையா முரளிதரன் தெரிவித்த கருத்திற்கு கோத்தபாய ராஜபக்ஷ பாராட்டு

முத்தையா முரளிதரன் தெரிவித்த கருத்திற்கு கோத்தபாய ராஜபக்ஷ பாராட்டு

இலங்கை அரசியல் நெருக்கடி நிலைக்கு மத்தியில் இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்த கருத்திற்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பாராட்டு தெரிவித்துள்ளார்.

நாட்டின் மக்கள் அரசியல்வாதிகளிடம் கேட்பது ஜனநாயகத்தையோ அல்லது உரிமைகளையோ இல்லை மூன்று வேளை உணவு உண்பதற்கும் தமது பிள்ளைகளிற்கு சிறந்த கல்வியை பெற்றுத்தருவதற்குமான பொருளாதார அபிவிருத்தியையுமே கேட்கின்றனர்

வடக்கிலும் தெற்கிலும் உள்ள மக்களின் அடிப்படை தேவைகளைக்கூட அரசியல்வாதிகள் பூர்த்தி செய்யவில்லை. குறிப்பாக தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்களிற்கு அரசியல் தீர்வு அவசியம் என தெரிவித்து வருகின்றனர் எனினும் அவ்வாறான தீர்வொன்று தேவையா என முரளிதரன் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் அவர் வெளியிட்ட கருத்து தொடர்பில் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ள கோட்டா,

“அனைத்து அரசியல்தலைவர்களும் இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும் பாடுபட வேண்டும் என்ற எனது நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் விதத்தில் முரளிதரனின் கருத்து அமைந்துள்ளது. மேலும் அவரது கருத்து அனைவருக்கும் உத்வேகம் அளிக்கின்றது” என கூறியிருந்தார்.