Sanskathi
Nov 09

நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்

நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்

தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார  தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். 

ஊடகங்கங்கள் மத்தியில் அமைச்சர் உரையாற்றுகையில் இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்தி நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். 

பாராளுமன்றத்தை எதிர்வரும் புதன்கிழமை கூட்டுவது என்ற நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்படுவதாகவும் பாராளுமன்றனத்தின் பெரும்பான்மை அதிகாரம் அரசாங்கத்திற்கு இருப்பதாகவும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்தார்.