Sanskathi
Nov 09

சர்கார் பிரச்சனையில் ராஜலட்சுமியை மறந்துட்டீங்களே; திருமுருகன் காந்தி வேதனை!

சர்கார் பிரச்சனையில் ராஜலட்சுமியை மறந்துட்டீங்களே; திருமுருகன் காந்தி வேதனை!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தளவாய்பட்டியைச் சேர்ந்த சிறுமி ராஜலட்சுமி(13). இவரை பக்கத்து வீட்டைச் சேர்ந்த தினேஷ்குமார் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி வந்துள்ளார். 

அவரது ஆசைக்கு இணங்க மறுத்ததால், கடந்த மாதம் 22ஆம் தேதி ராஜலட்சுமியின் தலையை துண்டித்து அவரது தாய் எதிரிலேயே கொடூரமாக தினேஷ்குமார் கொன்றுள்ளார். அவரைக் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. பல்வேறு அமைப்புகள் போராட்டத்தை முன்னெடுத்தன. ஆனால் அரசு தரப்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பெற்றோர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, நிர்பயாவிற்கும், ஸ்வாதி கொலைக்கும் அரசு செலுத்திய கவனத்தை, ராஜலட்சுமி படுகொலைக்கு ஏன் செலுத்தவில்லை