Sanskathi
Nov 09

ஸ்பெயின் கடற்பரப்பில் பயணிகள் கப்பல் விபத்து!

ஸ்பெயின் கடற்பரப்பில் பயணிகள் கப்பல் விபத்து!

ஸ்பெயினின் – கிரேன் கெனரியா தீவுப் பகுதியில் பயணிகள் கப்பல் ஒன்றும் உல்லாசப் படகு ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதுதொடர்பான காணொளியொன்று நேற்று (வியாழக்கிழமை) சமூக ஊடகங்களில் வௌியாகியிருந்தது.

இந்த சம்பவம் நேற்று ஐரோப்பிய நேரம் மாலை 4.30 அளவில் இடம்பெற்ற நிலையில், படுகாயமடைந்த 3 உல்லாசப் பயணிகள் உலங்கு வானூர்தி மூலமாக மீட்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

ஸ்பெனின் நிவீரா அர்மாஸ் என்ற நிறுவனத்திற்கு சொந்தமா கப்பல் கிரேன் கெனரியாவின் லாஸ் பாமாஸ் மற்றும் சன்டா குரூஸூக்கு இடையில் வழக்கமான சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.