Sanskathi
Nov 15

மகிந்த ராஜபக்ச பிரதமர் என்ற பதவி பெயரை பயன்படுத்துவது சட்டவிரோதமானது ; மங்கள சமரவீர

மகிந்த ராஜபக்ச பிரதமர் என்ற பதவி பெயரை பயன்படுத்துவது சட்டவிரோதமானது ; மங்கள சமரவீர

நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் பிரதமர் என்ற பதவி பெயரை பயன்படுத்துவது மற்றும் ஊடகங்களில் அதேவிதமாக பிரசாரம் செய்வது இலங்கை அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்பதுடன் நல்லொழுக்கமற்ற முற்று முழுதான சட்டவிரோத நடவடிக்கை என நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள விசேட அறிக்கை ஒன்றில் இதனை கூறியுள்ளார். “ஜனாதிபதி கடந்த 26ஆம் திகதி நியமித்த பிரதமர் உட்பட அமைச்சரவை சட்டவிரோதமானது.

அரசியலமைப்புச் சட்டத்தின் 48.(2) சரத்திற்கு அமைய நேற்று கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 122 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

இதன் மூலம் மகிந்த ராஜபக்சவின் பிரதமர் பதவியும் அமைச்சரவையும் இரத்தானது.அத்துடன் நாடாளுமன்றத்தின் பணிகள் இன்று ஆரம்பிக்கப்படும் போது சபாநாயகர், நாடாளுமன்றத்திற்கு தற்போது பிரதமரோ சபை முதல்வரோ, எதிர்க்கட்சித் தலைவரோ இல்லை என்பதை கூறியிருந்தார்.

நிலை இவ்வாறு இருக்கும் நிலையில், சில ஊடகங்கள் தொடர்ந்தும் மகிந்த ராஜபக்சவை பிரதமர் எனக் கூறி செய்திகளை வெளியிடுவது சட்டவிரோதமானது. இதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்றத்தின் சிறப்புரிமைகள் மீறப்படுவதுடன் அரசியலமைப்புச் சட்டமும் மீறப்படுகிறது.

ஊடகங்கள், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பெயருடன் பிரதமர் அல்லது அமைச்சர் என்ற வார்த்தைகளை பயன்படுத்துவது பாரதூரமான குற்றம் எனவும் தொடர்ந்தும் இதனை மேற்கொண்டால், எதிர்காலத்தில் சட்டநடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் மங்கள சமரவீர தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மாவீரர்கள்