Sanskathi
Dec 05

பருவநிலை மாற்றமே மக்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் – இயற்கை ஆர்வலர் எச்சரிக்கை

பருவநிலை மாற்றமே மக்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் – இயற்கை ஆர்வலர் எச்சரிக்கை

பருவநிலை மாற்றமே மக்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என இயற்கை ஆர்வலர் டேவிட் அட்டன்ப்ரோ தெரிவித்துள்ளார்.

போலந்திலுள்ள காட்வோஸ் நகரத்தில் ஐக்கிய நாடுகளின் சபை சார்பில் பருவநிலை மாற்றம் குறித்த உச்சி மாநாடு நடைபெற்று வருகின்றது.

இந்த மாநாட்டின் ஆரம்ப விழாவில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ”நமது நாகரிக வளர்ச்சி காரணமாக இயற்கையாக ஏற்பட்ட அழிவுக்கு நாம் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் அதன் அழிவின் ஆழம் அதிகரிக்க நேரிடும்.

தற்போதைக்கு மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கையான பேரிடர்களைதான் உலகம் முழுவதும் நாம் எதிர்கொண்டு வருகிறோம். பருவநிலை மாற்றமே நமக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது.

உலக மக்கள் இதுகுறித்துப் பேச வேண்டும். நமக்கு தகவல் கிடைத்துவிட்டது. நேரம் ஓடிக் கொண்டிருக்கிறது. முடிவெடுப்பவர்கள் விரைந்து செயல்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பரிஸ் பருவ நிலை ஒப்பந்தத்துக்குப் பிறகு பருவநிலையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த முக்கிய ஆலோசனைகள் நடைபெறும் மாநாடாக குறித்த மாநாடு கருத்தப்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது.