Sanskathi
Dec 05

தீவிரவாத எதிர்ப்பாளர்களிடமிருந்து விலகி செயற்படுங்கள்: நியாய போராட்டக்காரர்களிடம் கோரிக்கை

தீவிரவாத எதிர்ப்பாளர்களிடமிருந்து விலகி செயற்படுங்கள்: நியாய போராட்டக்காரர்களிடம் கோரிக்கை

நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராடிவரும் ஆர்ப்பாட்டக்காரர்கள், தீவிரவாத எதிர்ப்பாளர்களிடமிருந்து விலகி செயற்பட வேண்டும் என, பிரான்ஸ் உள்துறை அமைச்சர் கிறிஸ்டோப் கஸ்டானர் தெரிவித்தார்.

செனட் சபை அமர்வில் நேற்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ”அமைதிக்கான முக்கிய அழைப்பொன்றை விடுப்பதற்கு இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறேன்.

வன்முறையை ஆதரிக்காத நியாயமான ஆர்ப்பாட்டக்காரர்களை தீவிரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுவோரிடமிருந்து விலகி நிற்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

ஆனால், இவ்வாறான வன்முறைகளின் போதான பாதுகாப்பு படையினரின் செயற்பாடு பாராட்டத்தக்கது. அவர்களின் செயற்பாட்டால் பிரான்ஸில் நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோனின் எரிபொருள் சீர்த்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டத்தில் கடந்த சனிக்கிழமை பாரிய வன்முறை வெடித்தது.

இவ்வாறான வன்முறையின்போது மூவர் உயிரிழந்ததுடன் நூற்றுக் கணக்கானோர் காயமடைந்தனர். சுமார் 400 பேர்வரை கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மாவீரர்கள்