Sanskathi
Dec 06

அரசியல் பரபரப்பிற்கு மத்தியில் மீண்டும் கூடுகின்றது வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி

அரசியல் பரபரப்பிற்கு மத்தியில் மீண்டும் கூடுகின்றது வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி எதிர்வரும் 17 ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி செயலணியின் செயலாளர் எஸ். சிவஞானசோதி இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைகளுக்கு மத்தியில் இந்த செயலணி கூடவுள்ளமை விசேட அம்சமாகும்.

நாளுக்கு நாள் இலங்கையில் அதிகரித்து வரும் அரசியல் பரபரப்பிற்கு மத்தியில் கூடவுள்ள ஜனாதிபதி செயலணி கூட்டத்தின் போது காணி விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பேசப்படும் எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளமை தொடர்பில் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மாவீரர்கள்