Sanskathi
Dec 06

யேமன் போர் : ஐ.நா. ஆதரவுடன் சமாதான பேச்சுவார்த்தைகள் ஸ்வீடனின் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன

யேமன் போர் : ஐ.நா. ஆதரவுடன் சமாதான பேச்சுவார்த்தைகள் ஸ்வீடனின் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன

யேமனில் கடந்த 4 வருடங்களுக்கு மேலாக இடம்பெற்று வரும் மோதல்களை நிறுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையுடன் யேமனில் இருதரப்பு அமைதிப் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு குழுவினர் யேமன் அரச தரப்புடன் இணைந்து, ஹவுதி போராளிகளுடன் ஸ்டொக்கோமில் உள்ள ஜொஹன்னார்பேர்க் மாளிகையில் கடந்த வாரம் நடத்திய பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கை கட்டமைப்பிற்கான நடவடிக்கைகளை ஏற்று, இடைக்கால ஆளும் குழுவை அமைப்பதில் கவனம் செலுத்தப்பட்டது.

இந்தநிலையில், அடுத்த கட்ட பேச்சுவார்த்தையின் பொருட்டு யேமனின் சவுதி பின்புலத்துடனான அரசாங்க குழுவினர் நேற்று (புதன்கிழமை) சுவீடன் நோக்கி சென்றுள்ளனர்.

ஈரானுடன் இணைந்த ஹவுதி குழுவினருடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பித்து பொருளாதார அழிவையும், பஞ்சத்தையும் கொண்டு வரும் யுத்தத்தை முடிவுறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபை முயற்சித்து வருகின்றது.

யேமன் போர் சமீப காலங்களில் உலகின் மோசமான மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் மோதல்கள் காரணமாக உயிரிழப்பதுடன், லட்சக்கணக்கான மக்கள் பட்டியால் வாடுகின்றனர்.

மாவீரர்கள்