Sanskathi
Dec 06

பாரிஸில் உயர்-கல்வி மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தில் கார் எரிப்பு!

பாரிஸில் உயர்-கல்வி மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தில் கார் எரிப்பு!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மாணவர்கள் நடத்திய பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றின் போது உயர் பாடசாலையொன்றின் முன்பாக கார் ஒன்றும் எரியூட்டப்பட்டுள்ளது.

இன்று (வியாழக்கிழமை) நடத்தப்பட்ட போராட்டத்தின் போது, வீதியோரங்களில் இருந்த பொதுச் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தலைநகருக்கு வடகிழக்காக உள்ள லைசி பொலிவேலென்ட் பகுதியிலேயே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.

மாணவர்கள் படிப்படியாக “yellow vests” போராட்டத்துடன் இணைந்து கொள்ளும் நோக்கில் இன்று இந்த போராட்டத்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது்.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவெல் மக்ரோனின் வாழ்க்கை செலவு அதிகமுள்ள வரவு செலவு திட்டத்தை எதிர்த்து மேற்கொள்ளப்படும் போராட்டத்திற்கு இன்று காலை மாணவர்களும் ஆதரவு வழங்கி தீவிர ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவீரர்கள்