Sanskathi
Dec 06

19 ஆவது அரசியலமைப்பில் உள்ள முரண்பாடான சரத்துகளை மாற்றத் தயார்

19 ஆவது அரசியலமைப்பில் உள்ள முரண்பாடான சரத்துகளை மாற்றத் தயார்

19 ஆவது அரசியலமைப்பில் உள்ள முரண்பாடான சரத்துகளை நாடாளுமன்ற முறையின் அடிப்படையில் மாற்றியமைக்க தான் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியின் படி நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடி நிலையை தீர்க்க இன்னும் 5 நாட்களே இருக்கின்றன. இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே குறித்த விடயத்தை கூறியுள்ளார்.

“2015 ஜனவரி 08ஆம் திகதி ஜனாதிபதியாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் அவரது தலைமையிலான அயராத முயற்சியின் பெறுபேறாகவே, மூன்று தசாப்த காலமாக நாட்டில் ஜனநாயகம் தொடர்பில் நிலவிய சிக்கல் நிலைமைக்கு தீர்வாக இலங்கை அரசியலமைப்பின் 19வது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டது.

அந்த திருத்தச்சட்டத்தின் ஊடாகவே சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டமை, ஜனநாயக ரீதியிலான நிறுவனக் கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டமை உள்ளிட்ட சாதகமான பெறுபேறுகளை எமது சமூகம் பெற்றுக்கொண்டுள்ளது.

அவை எமது நாட்டில் ஜனநாயகத்தை மதிக்கும் மக்கள் பெற்றுக்கொண்ட உண்மையான வெற்றியாக அமையும் அதேவேளை, தாய் நாட்டின் நவீன யுகத்தை நோக்கிய பயணத்திற்கும் இன்றியமையாததாகும்.

எனவே 19வது திருத்தச்சட்டத்தில் ஏதேனும் நடைமுறை ரீதியிலான குறைபாடுகள் காணப்படுமாயின் இலங்கை அரசியலமைப்பின் 19வது திருத்தச்சட்டத்தின் கருப்பொருள் மற்றும் அதனூடாக ஏற்படுத்தப்பட்ட ஜனநாயக ரீதியிலான விடயங்களை பாதுகாத்து, பலப்படுத்தி அரசியல் ரீதியில் பிரச்சினைக்குரிய விடயங்களுக்கான திருத்தங்களை பாராளுமன்ற நடைமுறைக்கமைய மேற்கொள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் அர்ப்பணிப்புடன் இருக்கின்றார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில், தாம் 19 ஆவது திருத்த சட்டத்தை இல்லாதொழிப்போம் என கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாவீரர்கள்

Photo of Byron Bay, one of Australia's best beaches!

Event Calendar

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல் ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...
வன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019 வன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019...
முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.! முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.!...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மாபெரும் போராட்டத்திற்கு... வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மாபெரும் போராட்டத்திற்கு......
"இனியொரு விதி செய்வோம் 2019"...
முல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்... முல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்......
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி...
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி...
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி...