Sanskathi
Dec 06

இளவரசர் ஹரியின் மனைவியால் உயிருக்கு ஆபத்து – பெண்ணின் முறைப்பாட்டால் சர்ச்சை!

இளவரசர் ஹரியின் மனைவியால் உயிருக்கு ஆபத்து – பெண்ணின் முறைப்பாட்டால் சர்ச்சை!

பிரித்தானிய இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மேர்க்கலின் ஆதரவாளர்களால் உயிருக்கு ஆபத்து எனவும் தனது வங்கிக்கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும் பெண் ஒருவர் அளித்த முறைப்பாட்டால் சர்ச்சை எழுந்துள்ளது.

கிறிஸ்டினா கெயின் என்ற 41 வயது பெண்மணி ஒருவரே மேகன் மெர்க்கல் ஆதரவாளர்களால் தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இவரது சகோதரியும் 47 வயதான ட்ரினா என்பவர் மீதும் மேகனின் ஆதரவாளர்கள் தகாத வார்த்தை தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும், தங்களது வங்கிக் கணக்கை ஹேக் செய்து பணத்தை கொள்ளையிட்டுள்ளதாகவும் இவர்கள் முறைப்பாடு அளித்துள்ளனர்.

தங்களுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக கூறும் கெயின், மேகன் மேர்க்கலை எதிர்ப்பது மிகப்பெரிய ஆபத்தாக முடியும் என்பது தற்போது அம்பலமாகியுள்ளது என்று கூறியுள்ளார்.

மேகன் மேர்க்கலுக்கு ஆதரவாகவும் எதிராகவும் இணையத்தில் செயல்படும் இரு குழுவினரால் கண்டிப்பாக பிரித்தானியாவில் உயிர் பலி ஏற்படும் என்றும் கிறிஸ்டினா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேர்க்கலுக்கு ஆதரவாக இணையத்தில் களமாடும் “Megulators” என்ற முரட்டு குழுவினருக்கும், மேகன் மேர்க்கலை பிரித்தானியாவில் இருந்து துரத்துவதே தங்கள் நோக்கம் என களமாடும் “Megxit” என்ற குழுவினருக்கும் இடையே கடும் வார்த்தை போர் இடம்பெற்று வருகின்றது.

மேர்க்கலை இணையத்தில் தரக்குறைவாக விமர்சிக்கும் எவரையும் கடுமையாக தாக்கும் “Megulators” குழுவினருக்கு Sussex Squad என்ற பெயரும் உள்ளது.

சொந்த குடும்பத்தில் பிரச்சினையை கிளப்பியவர், 2 முறை திருமணம் செய்து கொண்டு தோல்வி கண்டவர், காதலர்களை கைவசம் வைத்திருப்பவர், இவர் பிரித்தானிய அரச குடும்பத்திற்கு உகந்தவர் அல்ல என்பது Megxit குழுவினரின் வாதம்.

ஆனால் மேகனின் ஆதரவாளர்கள் மிக சாமர்த்தியமாக செயல்படுவதாகவும், எதிர்ப்பாளர்களை துல்லியமாக தாக்குவதாகவும் இணையத்தில் கருத்து நிலவுகிறது.

இதனிடையே கிறிஸ்டினா கெயின் தமக்கு கொலை மிரட்டல் இருப்பதாக கூறி பொலிசாரிடம் முறைப்பாடு அளித்துள்ளார். மேலும், தற்காப்புக்காக துப்பாக்கி ஒன்றையும் கொள்வனவு செய்துள்ளதாக கிறிஸ்டினா கெய்ன் தகவல் வெளியிட்டுள்ளார்.

மாவீரர்கள்

Photo of Byron Bay, one of Australia's best beaches!

Event Calendar

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல் ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...
வன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019 வன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019...
முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.! முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.!...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மாபெரும் போராட்டத்திற்கு... வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மாபெரும் போராட்டத்திற்கு......
"இனியொரு விதி செய்வோம் 2019"...
முல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்... முல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்......
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி...
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி...
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி...