Sanskathi
Dec 11

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நோக்கத்தை வௌிப்படுத்திய விமல்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நோக்கத்தை வௌிப்படுத்திய விமல்!

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரனால் அடைய முடியாத தமிழீழத்தை பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்வீரவன்ச இந்த குற்றச்சாட்டை, கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் வைத்து முன்வைத்துள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் தமிழீழ இலக்கு அடைய முடியாமல் போய்விட்டது.தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சியின் மீதும், ரணில் விக்ரமசிங்கவின் மீதும் ஆதரவை வெளிப்படுத்தி இருக்கிறது.

மறைமுகமான சமஷ்டி அரசியல் யாப்பின் மூலம் தமிழீழத்தை அடைந்துக் கொள்வதற்காகவே கூட்டமைப்பு இந்த தீர்மானத்தை மேற்கொண்டிருக்கிறது.

தமிழீழத்தை பெற்றுக் கொள்ள ரணில் விக்ரமசிங்க போன்ற அரசியல்வாதி பயன்படுத்தப்படுகிறார் என்றும் விமல் வீரவன்ச கூறியுள்ளார்.