Sanskathi
Dec 11

நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு ஆதரவாக 118 வாக்குகள் கிடைக்கும்

நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு ஆதரவாக 118 வாக்குகள் கிடைக்கும்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக நாளை(புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நம்பிக்கை பிரேரணைக்கு ஆதரவாக 118 வாக்குகள் கிடைக்கும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் நம்பிக்கை வெளியிட்டார்.

நாளைய நாடாளுமன்ற அமர்வு தொடர்பில்  அவர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.

எனினும், ரணிலுக்கு ஆதரவான நம்பிக்கை பிரேரணைக்கு ஆதரவாக மக்கள் விடுதலை முன்னணி வாக்களிக்கும் என்ற நம்பிக்கை தமக்கு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பின்போது ஐக்கிய தேசிய முன்னணி தமது பெரும்பான்மையை நிரூபித்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மாவீரர்கள்