Sanskathi
Dec 12

தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபாவை அடிப்படைச் சம்பளமாக வழங்க முடியாது

தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபாவை அடிப்படைச் சம்பளமாக வழங்க முடியாது

மலையகத் தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபாவை அடிப்படைச் சம்பளமாக வழங்க முடியாது என பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் தலைவரான ரொஷான் இராஜதுரை தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், தற்போது மலையக தோட்டத்தொழிலாளர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் காரணமாக நாளொன்றுக்கு 240 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுகின்றது.

இந்த நட்டங்களை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனமே பொறுப்பேற்கின்றது. அத்துடன், இம்முறை தோட்டத்தொழிலாளர்களுக்கு இம்மாதத்திற்கான கொடுப்பனவுகளை வழங்க முடியுமோ? என்பது எமக்கு தெரியாது.

மாவீரர்கள்