Sanskathi
Dec 14

ரணில் – சம்பந்தனின் கையொப்பத்துடன் போலியான ஆவணம்- மரிக்கார் பொலிஸில் முறைப்பாடு

ரணில் – சம்பந்தனின் கையொப்பத்துடன் போலியான ஆவணம்- மரிக்கார் பொலிஸில் முறைப்பாடு

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இடம்பெற்றதாக கூறப்படும் இரகசிய ஒப்பந்தம் போன்ற ஒன்றை போலியான முறையில் தயாரித்தவர்களுக்கு எதிராக விசாரணை நடாத்தி சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடொன்றை முன்வைத்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க மீது பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கைப் பிரேரணைக்கு ஆதரவைப் பெற்றுக் கொள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இரகசிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், போலியான ஆவணங்களை வைத்து அதற்கு ஆதரமாகவும் காட்டி பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் அந்த முறைப்பாட்டில் கூறியுள்ளார்.

வடக்கு கிழக்கு இணைப்பு உட்பட பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக இந்த போலி ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ரணில் விக்ரமசிங்கவினதும், ஆர். சம்பந்தனினதும் கையொப்பங்கள் போலியாக இடப்பட்டுள்ளன. இந்த போலி ஆவணம் தொடர்பில் விரைவில் விசாரணை நடாத்துமாறும் அந்த முறைப்பாட்டில் அவர் கேட்டுள்ளார்.  

மாவீரர்கள்