Sanskathi
Dec 14

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி இடை நிறுத்தம்

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி இடை நிறுத்தம்

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி தற்காலியமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

மன்னார் மனித புதைகுழி தொடர்பாக பலரும் தற்போது கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், பல்வேறு நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள் நேரடியாக மன்னார் மனித புதைகுழிக்கு வருகை தந்து உண்மை நிலைவரங்கள் தொடர்பான தகவல்களை சேகரிக்கின்றனர்.

இந்நிலையில் மன்னார் மனித புதை குழியின் அகழ்வு பணிகள் கடந்த இரு தினங்களாக இடம் பெறவில்லை என அறிய முடிகின்றது.

 புதன்கிழமை 116 ஆவது நாளாக இடம் பெற்ற அகழ்வு பணிகளுக்கு பின்னர் நேற்றும் இன்றும் அகழ்வு பணி இடம்பெறவில்லை.

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்டவைத்திய அதிகாரி கடமையின் நிமித்தம் கொழும்பு சென்றுள்ளமையினாலேயே மேற்படி அகழ்வு பணி இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மீண்டும் குறித்த அகழ்வு பணியானது  எதிர்வரும் திங்கட்கிழமை சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த புதை குழியில் இருந்து  இது வரை 21 சிறுவர்களின் எலும்புக்கூடுகள் உற்பட மொத்தம் 276 முழு மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அவற்றில் 269 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் அகழ்வு பணிகளின் போது எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மாதிரிகள் 'காபன்' பரிசோதனைக்காக புலோரிடாவுக்கு அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.