Sanskathi
Dec 14

நாடு அராஜக நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது

நாடு அராஜக நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது

நாட்டில் முறையான அரசாங்கமொன்று காணப்படாத நிலையில், நாடு அராஜக நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை மீதான இடைக்கால தடையை எதிர்த்து நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு இன்று (வெள்ளிக்கிழமை) உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், விசாரணைக்காக நீதிமன்றில் பிரசன்னமாகிய நாடாளுமன்ற உறுப்பினர் அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டில் பிரதமரோ, அமைசசரவையோ இல்லாத நிலையில், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பிற்காக மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

மாவீரர்கள்