Sanskathi
Dec 31

ஜனநாயகம் உயர்ந்தோரின் ஏகபோக உரிமையா?

ஜனநாயகம் உயர்ந்தோரின் ஏகபோக உரிமையா?

60 ஆண்டுகளுக்கு மேல் தீவிரமாக அரசியலில் ரூடவ்டுபட்டு செயற்பட்டமையால் நாடு பெப்ரவரி 1948ல் சுதந்திரமடைந்துஇற்றைவரை நாடும் நாட்டு மக்களும் எதிர்நோக்கிய பல்வேறு அரசியல் பிரச்சினைகளில் சம்பந்தப்பட்டதோடுஅத்துறையில் போதிய அனுபவத்தையும் பெற்றுள்ளேன்.

ஆனால் அத்துறை சம்பந்தமாக எவரேனும் என்னுடன்கருத்துப்பரிமாறியதில்லை. ஆகவேதான் அண்மையில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு விடப்பட்ட ஒரு முக்கிய விடயம்சம்பந்தமாக எதுவித கருத்தும் தெரிவிக்காது மௌனமாக இருந்தேன். அதற்கமைய 7 நீதிபதிகள் மூலம் விசாரணை நடத்தியநீதிமன்று 6 ஆண்டுகளில் நான்கரை ஆண்டுகள் பூர்த்தியாகும் வரைக்கும் பாராளுமன்றம் கலைக்கப்பட முடியாது என்றும்அப்படிச் செய்வதானால் பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெறவேண்டுமெனவும் கூறியிருந்தது.

அப்பாவித்தனமாக ஏதாவது கருத்துத் தெரிவித்தால் அது நீதிமன்றை அவமதித்ததாகக் கருதி வழக்குத் தொடரக்கூடுமென்றபயத்தினால் எந்தவிதமான கருத்தும் நான் தெரிவிக்கவில்லை. தமக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை வைத்து கற்றறிந்தநீதிபதிகள் ஏகமனதாக வழங்கிய தீர்ப்பை அனைவரும் சிறந்த தீர்ப்பென பாராட்டியிருந்தார்கள். நானும் அதைஏற்றுக் கொண்டேன். எனது ஆதங்கம் யாதெனில் நீதிபதிகளுக்கு முன்பாக சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களை வைத்துவழங்கப்பட்ட தீர்ப்பைரூபவ்கட்சித் தலைவர்கள் அவசர அவசரமாக வரவேற்றமையே! சம்பந்தப்பட்ட வழக்குக்குத் தேவையான மேலும் பலஆதாரங்களை மன்றுக்கு சமர்ப்பித்திருந்தால் தீர்ப்பு வேறுவிதமாக அமைந்திருக்க வாய்ப்பிருந்தது.

இவ்வழக்கில் 10 வழக்காளிகளும் முன்வைத்த கோரிக்கை. ஒரே விடயம் சம்பந்தப்பட்டது. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால்முன்வைக்கப்பட்ட கோரிக்கை மட்டும் நியாயப்படுத்தப்பட முடியாத விடயமாகும்.

1948ல் இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொடக்கம் 2001 மார்கழி மாதம் வரை நடைபெற்ற தேர்தல்கள் எல்லாம்ஜனநாயகத்திற்கு விரோதமற்ற முறையில் நடத்தப்பட்ட நீதியான தேர்தல்களாகும். 2001 மார்கழி மாதம் நடைபெற்றதேர்தலே மிக பாராட்டத்தக்க வகையில் நடைபெற்ற தேர்தல்களில் ஒன்றெனக் கொள்ளலாம். ஆனால் துரதிர்ஷ்ட வசமாகபாராளுமன்றம் உரிய காலத்திற்கு முன் 2ஆண்டுகளும் 1மாதம் 18 நாட்களில் நியாயப்படுத்தப்பட முடியாத வகையில்கலைக்கப்பட்டது. 2004 ஏப்ரல் மாதம் இரண்டாந்திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஜனநாயகம் தடம்புரண்டு நாடு பலசிக்கல்களுக்கு முகம் கொடுக்கத்தக்கதாக அமைந்த தேர்தல் எனக் கொள்ளலாம்.

இத்தேர்தலில்தான் தமிழத் தேசியக் கூட்டமைப்பு 2தேசியப்பட்டியல் ஆசனங்கள் உட்பட 22 ஆசனங்களைப் பெற்றது.; வன்முறை - ஆள்மாறாட்டம் - மிரட்டல் மூலம் பெரும்வெற்றியீட்டிய கூட்டமைப்பு தமக்கு ஆதரவு நல்கிய அமைப்பொன்றை தட்டிக்கொடுத்தது. அதேபோல் அன்றைய அரசும்முறையற்ற விதத்தில் வெற்றியீட்டியவர்களை வெளியேற்றாது அல்லது போதிய சட்டம் இல்லாத இடத்தில் புதிய சட்டங்களைஉருவாக்கி நடவடிக்கை எடுக்கும்வரை அவர்களை சபை நடைவடிக்கைகளில் கலந்து கொள்ளாது தடுக்காது தனது கடமையில் இருந்து தவறியது.

அதிகாரிகள் கடைப்பிடித்த விருப்பு வெறுப்புக்களால் 22 பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது பதவியை சட்டப்படிநிலைநாட்டவும் 6 ஆண்டுகள் பதவியை தொடர்ந்து தக்கவைப்பதற்கும் உதவியது.

உள்ளுர் வெளியூர் தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் வடக்கு கிழக்குப் பகுதிகளில் தேர்தல்கள் மீள நடத்தப்பட வேண்டுமெனஆணைக்குழுவுக்குக் கொடுத்த அழுத்தத்தையும் வேண்டுகோளையும் தேர்தல்கள் ஆணையாளர் சட்டத்தில் இடமில்லை எனக்கூறிநிராகரித்தார். இந்த சந்தர்ப்பத்தில் ஜனநாயக அமைப்புக்கள்  அரச சார்பற்ற நிறுவனங்கள்  அரசியற்கட்சிகள் மனித உரிமை அமைப்புக்கள் போன்றவை உள்ளுரிலும் சரி வெளியூரிலும் சரி சட்ட விரோதமாக சபையில் கலந்துவாக்களித்ததை கண்டிக்காமல் மௌனம் சாதித்தமை இன்றுவரை புரியாத புதிராக இருக்கிறது!

அரசியல் கட்சிகள் யாவும் - தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சட்டத்திற்கு மாறான ஒரு அமைப்பென கண்டிக்காமை இன்றையநிலைமைக்கு ஒரு காரணமாக அமைந்திருக்கின்றன. கடந்த காலங்களில் சில ஆயுதக் குழுக்களின் நடவடிக்கைகளினால் ஜனநாயகசக்திகள் பாராளுமன்றம் செல்ல தடையாக இருந்ததை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாகும்.

என்னால் காலத்துக்குகாலம் விடுக்கப்பட்ட ஆட்சேபனைகளை யாரும் கண்டுகொள்ளவில்லை. இச்சந்தர்ப்பத்தில் மிகவும்பெரிதாகப் பாதிக்கப்பட்ட பிரிவினர் அப்பாவி மக்களே! ஜனநாயகம் எதிர்காலத்திலும் திரும்பும் என்பதில் எனக்குநம்பிக்கை இல்லை! ஆகவே இச்சந்தர்ப்பத்தில் சிலர் தலையிட்டு வசதி படைத்தவர்களுக்கு வாய்ப்பு தேடிக் கொடுப்பதை தடுப்பதற்குஅனைவரும் ஒன்று சேரவேண்டும். அப்பாவி மக்களின் உரிமைகளை துர்பபிரயோகம் செய்வதை தடுக்க வேண்டும்.சர்வதேச சமூகம் இத்தகைய விடயங்களில் தலையிட்டு சில தனிப்பட்ட தலைவர்களுக்கு உதவ வேண்டாம் என வேண்டுகிறேன். ஊடகங்கள்தனிப்பட்ட ஒருசிலருக்கு துதிபாடுவதைத் தவிர்த்து சுதந்திரமாக நாட்டுக்கு நன்மை பயக்கும் விதமாக செயற்பட வேண்டும் எனவேண்டுகிறேன்.

எனது தனிப்பட்ட வெளிப்படையான கருத்து யாதெனில் சகல சம்பந்தப்பட்ட விடயங்களும் மன்றுக்கு சமர்ப்பிக்கப்ட்டிருந்தால்தீர்ப்பு வேறுவிதமாக அமைந்திருக்கலாம் என்பதே!

வீ. ஆனந்தசங்கரி

செயலாளர் நாயகம் - த.வி.கூ