Sanskathi
Jan 10

ஒஸ்திரியாவில் பனிச்சரிவில் சிக்கிய வரைமான் பாதுகாப்பாக மீட்பு!

ஒஸ்திரியாவில் பனிச்சரிவில் சிக்கிய வரைமான் பாதுகாப்பாக மீட்பு!

ஒஸ்திரியாவில் பனிச்சரிவால் ஏற்பட்ட உறைபனிக்குள் புதைந்திருந்த ஐரோப்பிய வரைமான் ஒன்று பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது.

அட்மோன்ட் மற்றும் ஹீப்லவு நகரங்களுக்கு இடையே குறித்த ரயில் பயணித்துக்கொண்டிருந்தபோது தேசிய பூங்காவிற்கு நுழைவாயிலில் பகுதியில் அதிகளவிலான உறைபனி சூழ்ந்திருந்தது.

குறிப்பாக ரயில் பாதைகளின் தண்டவாளத்தை ஒட்டிய பகுதிகள் அனைத்தும் உறைபனியால் சூழ்ந்திருந்தது என குறித்த ரயில் சேவையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார்.

இதனால் சுமார் 30 கிலோமீற்றர் வேகத்தில் ரயில் சென்றுகொண்டிருந்தபோது தண்டவாளத்திற்கு அருகே ஐரோப்பிய வரைமான் ஒன்று, உறைபனிக்குள் சிக்கியதை ரயில் ஓட்டுநர் கண்டுள்ளார்.

இதன் காரணமாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மூடப்பட்டிருந்த உறைபனி அகற்றப்பட்டு, ஐரோப்பிய வரைமான் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

மாவீரர்கள்