Sanskathi
Jan 22

நாடாளுமன்றத்தினூடாக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சிறந்த தீர்வு

நாடாளுமன்றத்தினூடாக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சிறந்த தீர்வு

மனித உரிமை அமைப்புகள் மற்றும் நாடாளுமன்றத்தினூடாக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சிறந்த தீர்வை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற விசாரணை ஆணைக்குழுக்கள் திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டியது அவசியம். கடந்த காலத்தில் பொதுமக்களின் சொத்துக்கள், நிதி, அரச சொத்துக்கள், அரசின் வரப்பிரசாதங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டன. இதனை ஏற்க முடியாது.

வேர்வை சிந்தி உழைத்து வாழும் மலையக மக்களின் பிரதிநிதி என்ற வகையில், மக்களதும், அரசாங்கத்தினதும் சொத்துக்கள், நிதியை சூரையாடி ராஜபோகம் அனுபவிப்பவர்களை அனுமதிக்க முடியாது.

இந்த சட்டமூலத்தினுடாக நியாயம் பெற்றுக் கொடுக்கவிருப்பதை நாம் வரவேற்கிறோம். நாட்டிலும் சரி, நாடாளுமன்றிலும் சரி முறையான தலைமைத்துவம் இல்லாவிடின் அரச சொத்துக்கள் சூரையாடப்பட்டு தேர்தல் நடைபெற்றிருக்கும்.

ஆனால் நீதிமன்றம் சுயாதீனமாக நீதியாக செயற்பட்டு சரியான தீர்ப்பு வழங்கியதனால் இன்று நாடாளுமன்றம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

இது நாட்டின் முன்னேற்றத்திற்கும், சுபீட்சத்திற்கும் சிறந்த உதாரணம். கடந்த கால ஜனநாயக மீறல்களின் போதான பிரதமர் ரணிலின் தலைமைத்துவம் பாராட்டத்தக்கது.

நாடாளுமன்றம் இவ்வாறு தலைமைத்துவத்துடன் செயற்படுகின்ற நிலையில், முதலாளிமார் சம்மேளனம் பின்வாங்கிவரும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தை சபையின் கவனத்திற்கு கொண்டுவர எதிர்பார்த்துள்ளேன்.

மனித உரிமை அமைப்புகளினூடாகவும், இந்த உயரிய சபையினூடாகவும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சிறந்த தீர்வை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

மாவீரர்கள்