Sanskathi
Jan 22

தமிழர் ஜனநாயகம் பெரும்பான்மை தேசியத்தின் பாசீச அடக்குமுறையாளர்களால் பலியிடப்படுகிறது

தமிழர் ஜனநாயகம் பெரும்பான்மை தேசியத்தின் பாசீச அடக்குமுறையாளர்களால் பலியிடப்படுகிறது

அரசியில் யாப்பின் உருவாக்கத்துக்குப்  பொறுப்பாகவுள்ள இடதுசாரித் தலைவர்கள் “அரசியல் யாப்பு” பற்றி வதந்திகளைப் பரப்புபவர்களை அம்பலப்படுத்துகிறார்கள். இவர்கள் அரசியல்யாப்பினை உருவாக்கிற உப குழுக்களில் உறுப்புரிமை வகிக்கிறார்கள்.

எல்லா சமூகங்களின் உரிமைகளையும் அடையாளங்களையும் பாதுகாக்கும் பொருட்டு இடதுசாரிகள் ஒரு புதிய அரசியல் யாப்புக்கு  ஆதரவு திரட்டுகிறார்கள். அத்தோடு சனாதிபதிக்குரிய கடுமையான அதிகாரங்கள் ஒழிக்கப்பட வேண்டும் தேர்தல் முறைமை மாற்றப்பட வேண்டும் என்பதயும் வலியுறுத்துகிறார்கள்.  அரசியல் யாப்பு  வரைவை உருவாக்குவதற்கு  நியமிக்கப்பட்ட வழிகாட்டுக் குழு அதனை நிறைவேற்ற முடியாது இருக்கிறது. காரணம்  நிறைவேற்று அதிகாரம் படைத்த சனாதிபதி, தேர்தல் முறைமை மற்றும் அதிகாரப் பரவலாக்கல் போன்ற முக்கிய அம்சங்களில் ஒத்த கருத்தை அடையத் தவறிவிட்டது.

“நாங்கள் இப்போதும்  அரசியல் யாப்பை  உருவாக்கும் கட்டத்தில் உள்ளோம். ஆனால் ஒன்றுபட்ட எதிர்க்கட்சி ஒரு சமஷ்டி அரசியல் யாப்பு உருவாக்கப்படுவதாக வதந்திகளைப் பரப்பி வருகிறது.  அரசியல் யாப்பு உருவாக்கம் ஒரு நீண்ட செய்முறை. கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரு அரசியல் வரைவைக் கூட எம்மால் உருவாக்க முடியவில்லை” என நாடாளுமன்ற உறுப்பினர்கள் சொன்னார்கள். அவர்களில் சிலர் அரசியல் அமைப்புச் சபையையும் வழிகாட்டுக் குழுவையும் தொடர்ந்து முன்னெடுப்பது பயனற்றது எனச் சொன்னார்கள். அரசியல் அமைப்புச் சபைக்கு வழிகாட்டுக் குழுவின் சகல  முன்மொழிவுகளையும் சமர்ப்பிக்கலாம் என வலியுறுத்துகிறார்கள்.

தமிழ் அரசியல் கட்சிகள், குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) அரசியல் யாப்பு செய்முறைபற்றி மகிழ்ச்சி தெரிவிக்கின்றன. அவர்கள் தமிழர்களது அரசியல் அபிலாசைகளை (புதிய) அரசியல் யாப்பு கவனத்தில் எடுத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கிறன.

கடந்த மூன்று ஆண்டுகளாக நல்லாட்சித் தலைவர்கள்  தமிழர்களுக்குக் கொடுத்த  வாக்குறுதிகளின் அடிப்படையில் சமஷ்டி அரசியல் பண்புகளைக் கொண்ட ஒரு புதிய அரசியல் யாப்பு வரும் எனப் பல்வேறு காலக் கெடுகளைக்  கொடுத்து வந்தார்கள்.

புதிய அரசியல் யாப்பு

அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன்  நாட்டின் சுதந்திர நாளான பெப்ரவரி 4 க்கு முன்னர் புதிய அரசியல் யாப்பு முன்வைக்கப்படும் எனச் சொன்னார்.  நாடாளுமன்றத்தில் புதிய அரசியல் யாப்பு வரைவையா  அல்லது புதிய அரசியல் யாப்பையா பெப்ரவரி 4 க்கு முன்னர் சமர்ப்பிக்கப்படும் என எதனை மனதில்  வைத்துச் சொன்னார் என்பது தெரியவில்லை.

அவர் எதை நினைத்தாரோ ஒன்று மட்டும் தெளிவானது. பிரதமர் இரணில் விக்கிரமசிங்க ஒரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.  அந்த அறிக்கை அரசியல் யாப்பு வரைவைத் தயாரிக்கப் பயன்படுத்தப் பயன்படும். அனைத்துக் கட்சி நிபுணர்களால் தயாரிக்கப்பட்ட  அறிக்கை இராசபக்சா முகாம், இவர்கள் எப்போதும்  ஒரு தமிழ்ப் பூச்சாண்டியை கண்டுபிடிப்பவர்கள், அரசாங்கம்  ததேகூ ஓடு சேர்ந்து  முடிவில் நாட்டைப் பிளவுபடுத்தும் சமஷ்டி அரசியல் யாப்பைக் கொண்டுவரப் போகிறார்கள் என்கிறது.

இவர்கள் பயங்கரப் பொய்யர்கள். நிபுணர்கள் கூடி ஆராயந்து தயாரித்த அறிக்கையின் அடிப்படையில் ஒரு அரசியல் யாப்பைப்  தயாரிக்கும் பணி இப்போதுதான் தொடங்கியுள்ளது. மகிந்தா குழு இருக்கும் போது யாரேனும், ததேகூ அல்லது வேறு யாரேனும் செல்வாக்குச் செலுத்த முடியுமா?

சிறிலங்காவில் 1956 இல் உத்தியோக மொழிச் சட்டம் இல 33  இயற்றப்பட்டதைத் தொடர்ந்து தமிழர்களது மொழி உரிமைகள் மீறப்பட்டன என்பது எங்களுக்குத் தெரியும். அந்தச் சட்டம்தான் சிறிலங்காவில் வாழ்ந்த தமிழர்களது மனித உரிமைகளை மீறியது. அதுதான் 1958, 1577,1983 இல் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை,  2008-2009 ஆண்டுகளில் தமிழர்களது  ஆயுதப் போராட்டத்தை அடக்குவதில் முடிந்தது.  இருந்தும் 88-89 இடம்பெற்ற துன்பியல் இன்று மறக்கப்பட்டுவிட்டது. 

ஒருவேளை அது சிங்கள இளைஞர்களது மனித உரிமை மீறலுக்கும் பொருந்தும். அது தேவை என்று பார்க்க முடியாது. ஆனால் தமிழர்களது சுயநிருணய உரிமைகளுக்குப் பொருத்தமானது.  இனம் தெரியாதோரால் 50,000 சிங்களவர்கள் காணாமல் போனார்கள், 20,000 பேர்களாவது கொல்லப்பட்டார்கள். ஆனால்  அரசியலைப் பொறுத்தளவில் என்ன நடந்தது என்பது எமக்குத் தெரியும்.

நாட்டிலுள்ள மக்கள் காணாமல் போனார்கள்,  தண்டனைப் பயனின்மை எழுச்சி பெற்றது.  இந்த இரண்டையும் விளங்கிக் கொள்வதற்கு  1971 ஆண்டில் இடம்பெற்ற  சிங்கள இளைஞர்களது கிளர்ச்சிபற்றி அறிந்து கொள்ள வேண்டும்.  இந்தக் கிளர்ச்சி  அரசாங்கத்தின் பொலீஸ் மற்றும் பாதுகாப்புப் படையினரால் வன்முறை மூலம் அடக்கப்பட்டது. 

அண்ணளவாக  5,000 சிங்கள இளைஞர்கள் உயிரிழந்து போனார்கள். சிலர் அந்தச் சந்தர்ப்பத்தில்தான் சிறிலங்கா இராணுவம், பொலீஸ்  தங்களது இலங்கை இளைஞர்களைச்  சித்திரவதை, ஆள்கடத்தல் மற்றும் விசாரணையற்ற கொலைகள் பற்றி பயிற்சி பெற்றதோடு   அனுபவத்தையும் பெற்றுக் கொண்டார்கள். இந்த அனுபவத்தை வைத்துத்தான் கருத்து வேறுபாடு உடையோரை  அரசாங்கத்தின் மௌனமான அனுமதியோடு ஒடுக்கினார்கள். இந்த நிகழ்வுகள் தொடர்பாக கரிசனையான விசாரணைகள் இடம்பெற்று அதற்குப் பொறுப்பானவர்கள்  தண்டிக்கப்படவில்லை. 

விதிவிலக்கு மாத்தறையில் அழகுராணி ஒருவர் நிருவாணமாக தெருக்களில் அழைத்துச் செல்லப்பட்டு  கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம்.  இந்தக் கால கட்டத்தில்தான் குற்றம்செய்துவிட்டு  தண்டனையில் இருந்து தப்பி விடலாம் என்ற கலாச்சாரம் பொலீஸ் மற்றும் பாதுகாப்புப் படைகளின் மனதில் முளைவிட்டது.

அது போன்ற சம்பவங்கள் 1988 – 1989 இல் சிங்கள இளைஞரிடம் (ஜேவிபி மற்றும்  டிஜேபி) பரவலான அதிருப்தி நிலவியது. அதற்கான பாவனைக் காரணம் அடுத்தடுத்து பதவிக்கு வந்த அரசாங்களின் பொருளாதாரக் கொள்கைள். அந்தக் கொள்கைகள் படித்த இளைஞர்களது வேலைத் தாகத்தை தீர்க்கவில்லை.

அவர்களால் ஏற்படுத்தப்பட்ட  கலகம்  1987 இல் கைச்சாத்திடப்பட்ட இந்திய – இலங்கை உடன்பாடு எழுதப் பட்ட போது கொதிநிலையை எட்டியது. சிங்கள இனவாதிகள் அதனை எதிர்த்தார்கள். அதனை ஜேவிபி  தட்டிக் கொடுத்தது. அந்த உடன்பாடு அதிகாரத்தைப் பரவலாக்கி மாகாணசபைகளை உருவாக்க எத்தனித்தது.  அவர்கள் அப்படியான சுயாட்சி  தேசியத்தின் அடிப்படையில் நாட்டை பிராந்தியங்களாக  பிளவு படுத்துவதற்கு இட்டுச் செல்லும் என்றார்கள்.

ஜேவிபி சிங்கள இனவாத அமைப்புகளுடன்,  இனவாத தேரர்கள் மற்றும்  பாசீச சக்திகளோடு சேர்ந்து பயங்கரவாதத்தை கட்டவுழ்த்து விட்டு ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றார்கள். அவர்களது கலவரம் மற்றும் பயங்கரவாதக் கொலைகள் வெறித்தனமாக மாறியது.  அவற்றைக் கட்டுப்படுத்தவோ ஆட்சிசெய்யவோ அரசாங்கத்துக்கு கிட்டத்தட்ட முடியாத காரியமாக இருந்தது. ஜேவிபி இன் நிறுவனர் விஜயவீரா தேச பிரேமி ஜனதா வியாபாரய என்ற பெயரைப் பயன்படுத்தினார்.

அந்த அமைப்பு அதிகாரப் பரவலாக்கலையும்  சிறுபான்மையரது உரிமைகளையும்  ஆதரித்தோரைத் தாக்கியது. தேர்தலில் பங்கு கொண்ட பொதுமக்கள் தாக்கப்பட்டார்கள், காயப்படுத்தப்பட்டார்கள் அல்லது கொலை செய்யப்பட்டார்கள். வீடுகள் கொளுத்தப்பட்டன அல்லது உடைக்கப்பட்டன. வாகனங்கள் களவாடப்பட்டன அல்லதுசேதப்படுத்தப்பட்டன.

தமிழர்களது சுயாட்சியை ஆதரித்த அரசியல் கட்சிகள் தாக்கப்பட்டன. அந்தக் கட்சித் தலைவர்கள் கொல்லப்பட்டார்கள். இடதுசாரிகள் மோசமாகத் தாக்கப்பட்டார்கள். சோசலிஸ்ட் முன்னணியின் தலைவர் விஜய கொடுமையான முறையில் கொல்லப்பட்டார். பாகு கிட்டத்தட்ட உயிர்போகுமளவுக்குத் தாக்கப்பட்டார்.

நாங்கள் ஒடுக்குமுறைக்கு ஆளான தேசிய இனங்களின் துன்பங்கள் நேராவண்ணம் பார்ப்பதுபோல  பெரும்பான்மை  தேசிய இனங்களின் சனநாயகம் ஒடுக்குமுறையாளர்களால் பாதிப்புக்கு உள்ளாகாதவாறும் பார்த்துக் கொள்ள வேண்டும்.  

மாவீரர்கள்