Sanskathi
Jan 23

அரசுடன் இணைந்து கூட்டமைப்பினர் செயற்பட அரசியல் விபத்தே காரணம்

அரசுடன் இணைந்து கூட்டமைப்பினர் செயற்பட அரசியல் விபத்தே காரணம்

அரசுடன் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பினர் செயற்படுகின்றமைக்கு, நாட்டில் ஏற்பட்ட அரசியல் விபத்தே காரணமென அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மடு பிரதேச செயலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு, உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இந்த நாட்டிலே 58 நாட்களின் பின்னர் புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அரசியல் விபத்தாக இருந்தாலும் கூட விபத்தினால் நல்ல காரியங்களும் இடம்பெற்றுள்ளன.அதன்படி தற்பொழுது, தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அரசுடன் இணைந்து செயற்படுகின்றனர்.

இந்த அரசியல் விபத்து எனது அமைச்சிற்கும் நல்ல பக்கவிளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. எனக்கும் கடந்த காலங்களைவிட அதிகமான பொறுப்புக்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

எனவே வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொள்வோம்“ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மாவீரர்கள்