Sanskathi
Feb 07

ஒன்ராரியோவில் உறைபனி காரணமாக பாடசாலை வாகனங்கள் ரத்து!

ஒன்ராரியோவில் உறைபனி காரணமாக பாடசாலை வாகனங்கள் ரத்து!

தென்மேற்கு ஒன்ராரியோ, வின்ட்சர் பகுதிகளில் நிலவும் கடுமையான உறைபனி பொழிவு காரணமாக பாடசாலை வாகனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் கடுமையான பனிப்பொழிவுடன், பனிப்புயலும் வீசிவருகின்ற நிலையில் உள்ளூர் நேரப்படி இன்று (வியாழக்கிழமை) அதிகாலை முதல் கடும் உறைபனி மழை பொழிவு நிலவியது.

இதன் காரணமாக வீதிகளில் போக்குவரத்துக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, மாணவர்கள் பாடசாலைகளுக்கு செல்வதில் கடும் சிரமங்களை எதிர்நோக்க நேரிடும் என கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில், தென்மேற்கு ஒன்டாரியோ, வின்ட்சர் பகுதியை சுற்றி அமைந்துள்ள பாடசாலை பேருந்து சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வின்ட்சர், எசெக்ஸ், சார்னியா-லாம்ப்டனில், சத்தாம்-கென்ட், லண்டன், மிடில்செக்ஸ், எல்ஜின், ஒக்ஸ்போர்ட் ஆகிய அனைத்து பகுதிகளுக்குமான பாடசாலை பேருந்து சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

மாவீரர்கள்