Sanskathi
Feb 09

எது நாட்டுக்கோழி? எது புரொய்லர் கோழி? பாராளுமன்றில் காமெடி.!

எது நாட்டுக்கோழி? எது புரொய்லர் கோழி? பாராளுமன்றில் காமெடி.!

நாட்டுக்கோழி, புரொய்லர் கோழி போன்று அமைச்சுப்பதவிகள் வழங்கப்பட்டுள்ளதால் எது நாட்டுக்கோழி? எது புரொய்லர் கோழி? என கண்டுபிடிப்பதில் குழப்பம் ஏற்படுவதாக மக்கள் விடுதலை முன்னணி தலைவரும் எம்.பி.யுமான அனுரகுமார திசாநாயக்க நேற்றையதினம் சபையில் தெரிவித்துள்ளார்.

நேற்று பாராளுமன்றத்தில் 27/2 கீழ்  சுற்றுச்சூழல் அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அனுரகுமார திசாநாயக்க கேள்வி எழுப்பியிருந்தார்.

இக்கேள்விக்கு ஜனாதிபதிக்கு பதிலாக சுற்றுச்சூழல் இராஜாங்க அமைச்சர் அஜித் மானப்பெரும பதிலளித்தார்.

இதன்போது  இடையீட்டுக்கேள்வியொன்றை அனுரகுமார எம்.பி.எழுப்பும்போது அஜித் மானப்பெருமவை பிரதி அமைச்சர் என அழைத்தார்.

இதன்போது அரச தரப்பிலிருந்து சிலர், பிரதி அமைச்சர் அல்ல இராஜாங்க அமைச்சர் எனக்கூறினர்.

அதேபோன்று அனுரகுமார எம். பி பிரதி அமைச்சர் புத்திக்க பத்திரணவிடம் ஏதோவொன்று கேட்க முற்பட்டபோது,  நீங்கள் பிரதியா ? இராஜாங்கமா?எனக் கேட்டார்.

இதன் பின்பே அநுரகுமார எம்.பி. நாட்டுக்கோழி, புரொய்லர் கோழி போன்று அமைச்சர், பிரதி அமைச்சர், இராஜாங்க அமைச்சர், அமைச்சரவை அந்தஸ்து அல்லாத அமைச்சு என அமைச்சுப்பதவிகள் வழங்கப்பட்டுள்ளதால்,

எது நாட்டுக்கோழி? எது புரொய்லர் கோழி? எனக்கண்டுபிடிப்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

மேலும் அமைச்சுப்பதவிகள் அடிக்கடி மாறுவதால் யாருக்கு என்ன பதவி என்பது தெரியாமலுள்ளதாகவும் நகைச்சுவையாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாவீரர்கள்

Photo of Byron Bay, one of Australia's best beaches!

Event Calendar

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல் ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...
வன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019 வன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019...
முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.! முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.!...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மாபெரும் போராட்டத்திற்கு... வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மாபெரும் போராட்டத்திற்கு......
"இனியொரு விதி செய்வோம் 2019"...
முல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்... முல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்......
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி...
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி...
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி...