Sanskathi
Feb 11

ஞானசார தேரர் விடுவிக்கப்படவில்லை -போராட்டத்தை தொடர்வோம் என்கிறது பொதுபலசேனா!

ஞானசார தேரர் விடுவிக்கப்படவில்லை -போராட்டத்தை தொடர்வோம் என்கிறது பொதுபலசேனா!

பொது­பல சேனாவின் பொதுச் ­செய­லாளர் ஞான­சார தேர­ருக்கு கடந்த தேசிய சுதந்­திர தினத்­தன்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேன பொது மன்­னிப்பு வழங்­கா­மைக்கு அர­சியல் அழுத்தங்களே கார­ண­மாகும். என்­றாலும் அவ­ரது விடு­த­லைக்­காக பொது­ப­ல­சேனா அமைப்பு உட்­பட பௌத்த அமைப்­புகள் தொடர்ந்தும் அழுத்­தங்­களைப் பிர­யோ­கிக்கும் வகை­யி­லான போராட்­டங்­களை நடத்தும் என பொது­ப­ல­சேனா அமைப்பின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் டிலன்த விதா­னகே தெரி­வித்தார்.

ஞான­சார தேரரின் விடு­தலை தொடர்பில் ஊட­கங்­க­ளுக்குக் கருத்து தெரி­விக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், ‘கொடிய யுத்­தத்­தி­லி­ருந்து நாட்டை மீட்டெ­டுத்த இரா­ணுவ வீரர்­க­ளுக்­கா­கவும், தாய்­நாட்­டுக்­கா­கவும், பௌத்­தத்­துக்­கா­கவும் குரல் கொடுத்த ஞான­சார தேரரை விடுவிக்கும்­படி மகா­நா­யக்க தேரர்கள், சிவில் சமூக அமைப்­புகள், இந்து சம்­மே­ளனம், முஸ்­லிம்கள் என பலர் ஜனா­தி­ப­தி­யிடம் கோரிக்கை­களை முன்­வைத்தும் இது­வரை ஜனா­தி­பதி அவ­ருக்கு பொது­மன்­னிப்பு வழங்கி விடு­தலை செய்­ய­வில்லை.

சுதந்­திர தினத்­தன்று அவர் விடு­தலை செய்­யப்­ப­டுவார் என முழு நாடும் எதிர்பார்த்­தி­ருந்து ஏமாற்­றப்­பட்டு விட்­டது. ஞான­சார தேரரின் விடு­த­லைக்­கான போராட்­டங்­களை நாம் கைவிடப்போவதில்லை.

இது தொடர்பில் மீண்டும் பொது மக்­க­ளையும், மகா­நா­யக்க தேரர்களையும் தெளி­வு­ப­டுத்­த­வுள்ளோம். அவ­ருக்கு விடு­தலை கிடைக்­கும்­வரை எமது போராட்­டங்கள் தொடரும் என்றார்.

இதே­வேளை சிங்கள ராவய, ராவணாபலய மற்றும் சிங்களே அபி ஆகிய அமைப்புகளும் ஞானசார தேரரின் விடுதலைக்கான போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளன.

மாவீரர்கள்

Photo of Byron Bay, one of Australia's best beaches!

Event Calendar

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல் ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...
வன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019 வன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019...
முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.! முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.!...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மாபெரும் போராட்டத்திற்கு... வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மாபெரும் போராட்டத்திற்கு......
"இனியொரு விதி செய்வோம் 2019"...
முல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்... முல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்......
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி...
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி...
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி...