Sanskathi
Feb 11

குமாரபுரம் படுகொலையின் 23ம் ஆண்டு நினைவேந்தல் த.தே.ம.மு ஆல் அனுஸ்டிப்பு!

குமாரபுரம் படுகொலையின் 23ம் ஆண்டு நினைவேந்தல் த.தே.ம.மு ஆல் அனுஸ்டிப்பு!

பெப்ரவரி 11, 1996 அன்று இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள குமாரபுரம் என்ற கிராமத்தில் இலங்கை இராணுவம் மற்றும் துணைப்படைகளால் மேற்கொள்ளப்பட்ட துன்பியல் நிகழ்வாகும். இதன் மூலம் 9 பெண்கள், 12 வயதிற்குக் கீழ்ப்பட்ட 9 பிள்ளைகள் உட்பட 24 பேர் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் 26 பேர் மிக மோசமாகப் படுகாயமடைந்தனர்.

இந்த படுகொலையின் 23ம் வருட நினைவேந்தல்கள் இன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு ஸ்ரீலங்கா இனஅழிப்பு படைகளால் கொல்லப்பட்ட எமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்

மாவீரர்கள்