Sanskathi
Feb 11

தம்பகாமம் பகுதி மக்களுக்கான மாதிரிக்கிராம வீட்டுத்திட்ட வேலைகளைப் பார்வையிட்ட சிறீதரன் எம்.பி.

தம்பகாமம் பகுதி மக்களுக்கான மாதிரிக்கிராம வீட்டுத்திட்ட வேலைகளைப் பார்வையிட்ட சிறீதரன் எம்.பி.

தம்பகாமம் பகுதி மக்களுக்கான மாதிரிக்கிராம வீட்டுத்திட்ட வேலைகளைப் பார்வையிட்ட சிறீதரன் எம்.பி.

பளை தம்பகாமம் கிராமத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு நிரந்தர வீடுகளின்றி வாழும் மக்களுக்கான நிரந்தரவீட்டுத்திட்டங்கள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களின் கோரிக்கைக்கமைய, வீடமைப்பு உட்கட்டுமான அபிவிருத்தி அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களால் வீடமைப்புத் திட்டத்தினூடாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் மூலம் அமைக்கப்படுகின்றது. இதன் கீழ் அமைக்கப்படும் தம்பகாமம் பகுதி மாதிரிக் கிராம வீட்டுத்திட்டப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் வீட்டுத் திட்டப் பயனாளிகளுடனும் கலந்துரையாடி கிhரமத்தில் உள்ள ஏனைய வளப் பற்றாக்குறைகளையும் கேட்டறிந்துகொண்டார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழுகின்ற பல கிராமங்களில் மக்களுக்கான நிரந்தர வீட்டுத்திட்டங்கள் வழங்கப்படாத நிலையில் நீண்ட காலமாகப் பலர் தற்காலிக கொட்டகைளில் அவலப்பட்டு வருகின்றார்கள். மக்களது அவலங்களை பாராளுமன்றத்திலும் ஏனைய உரிய இடங்களிலும் சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிரந்தர வீட்டுத்திட்டங்களை வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள் பல தடவைகள் வலியுறுத்தி வந்தார்.

இந்நிலையில் மகிந்தராஜபக்ச அரசின் அராஜக ஆட்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதனைத் தொடரந்து பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள் சுட்டிக்காட்டிய விடயங்களைக் கருத்திற்கொண்ட தற்போதைய அரசாங்கம் பாதிக்கப்ட்ட மக்களுக்கான வீடமைப்புத் திட்டங்களை அமைக்கும் பணிகளை ஆரம்பித்து செயற்படுத்தி வருகின்றது.

அவ்வகையில் கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள. இதன் ஒரு அங்கமாக பச்சிலைப்பள்ளிப் பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள தம்பகாமம் பகுதியில் கிராமம் ஒன்றில் 20 வீடுகளும் கிராமம் இரண்டில் 12 வீடுகளும் கொண்ட மாதிரிக் கிராம வீடமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இப்பகுதிக்கு நேற்றைய தினம் நேரில் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் முகாமையாளர் சுபாஸ்கரன், உதவிப் பொறியியலாளர் சிவநேசன், தொழிநுட்ப உத்தியோகத்தர் மதிதீபன் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்கள் வீடமைப்புப் பணிகளைப் பார்வையிட்டு மக்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது தம்பகாமம் பகுதியின் வீதி புனரமைப்பு மக்கள் எதிர்நோக்கும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினரிடம் மக்கள் தமது கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.  

மாவீரர்கள்

Photo of Byron Bay, one of Australia's best beaches!

Event Calendar

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல் ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...
வன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019 வன்னிமயில்” விருதுக்கான போட்டி 2019...
முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.! முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10வது ஆண்டு பேரணிக்கான கலந்தாய்வு.!...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மாபெரும் போராட்டத்திற்கு... வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மாபெரும் போராட்டத்திற்கு......
"இனியொரு விதி செய்வோம் 2019"...
முல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்... முல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன்......
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கி...
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி...
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி...
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய பேரணி...