Sanskathi
Feb 12

தொண்டர் ஆசிரியர் நியமனத்தில் வடக்கு- கிழக்கு இடையே பாகுபாடு

தொண்டர் ஆசிரியர் நியமனத்தில் வடக்கு- கிழக்கு இடையே பாகுபாடு

வடக்கு மாகாணத்திலுள்ள தொண்டர் ஆசிரியர்களுக்கு கட்டம் கட்டமாக நிரந்தர நியமனம் வழங்கப்படும்போது கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் புறக்கணிக்கப்படுவதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்துக்குட்பட்ட சிங்கபாரதேப்பு சரஸ்வதி வித்தியாலய வருடாந்த விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வு நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. குறித்த நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”வடமாகாணத்தில் இரண்டு தடவை தொடண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் நியமிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது.

தொண்டர் ஆசிரியர் விடயத்தில் வடக்கு மாகாணத்துக்கு ஒரு சட்டம், கிழக்கு மாகாணத்திற்கு மற்றுமொரு சட்டம் இருக்க முடியாது.

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் செய்த குறைபாடு காரணமாக கல்குடா மற்றும் மட்டக்களப்பு மேற்கு ஆசிரியர் பற்றாக்குறையை எதிர்நேக்குகின்றது. மட்டக்களப்பு கல்வி வலயத்தில் ஆசிரியர்கள் மேலதிகமாக உள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக மாகாண கல்வி பணிப்பாளர், ஆளுநர், மற்றும் மத்திய கல்வி அமைச்சரோடு பேச இருக்கிறோம். ஆசிரியர் பற்றாக்குறையோடு தொடர்ந்தும் பாடசாலைகள் இயங்க முடியாது” எனத் தெரிவித்தார்.

மாவீரர்கள்